பக்கம் : 610
 

 

 

மருவிய 1மனிதரு மனநனி யயர்வுறு
தெருவுகள் படுவது சிலரிடை தெரிவார்.
 

     (இ - ள்.) புரவிய குரமுகம் - குதிரைகளின் குளம்புகளின் நுனி, இடுதொறும் -
மிதித்திடுந்தோறும், பொடியெழும் - நிலத்தில் துகள்கள் எழாநிற்கும், அருவிகொள் மதமழை
பொழிதொறும் - யாானைகள் அருவிகொண்டோடும்படி மதநீராகிய மழையைப் பொழியும்
தோறும், துகளாய நிலம், அளறெழும் - சேறாம், (இவ்வாற்றால் அவ்வழி) மருவிய மனிதரும்
மனம் நனி அயர்வுறு தெருவுகள் - சென்ற மனிதர்கள் மனம் மிகவும் வருந்துதற்குக்
காரணமான அத்தெருக்கள், படுவது சிலர் இடை தெரிவார் - படும்பாட்டை ஒரு சிலரே,
காண்பாராயினர், (எ - று.)

     தெருக்கள் அங்ஙனமாதலைப் படையின் ஊடே சென்று பார்க்கவும் அரிதென்பார்
தெருபடும்பாட்டைச் சிலரே தெரிவார் என்றார். புரவிகளாற் றுகளெழுந்தும் யானை
மதத்தாற் சேறுபட்டும் தெரு படும்பாடு கூட்டமிகுதியாற் றெரிவரியதாம் என்க.
 

( 113 )
 
940.

செருவியல் களிறுகள் செவிபுடை யரவமு
முருவிய லிவுளிக ளொலிகலி யரவமும்
கருவிகொள் வயவர்கள் கழனர லரவமும்
விரவிய செவிபிற விளி2கொள் லிலவே.
 

     (இ - ள்.) செருவியல் களிறுகள் - போர் செய்யும் இயல்பினவாகிய யானைகள்,
செவிபுடை அரவமும் - செவிகளால் அடித்தெழுப்பும் ஒலியும், உருவியல் இவுளிகள் -
நல்லிலக்கணம் அமைந்த புரவிகளின், ஒலி கலி அரவமும் - வீரக்கழல்கள் எடுக்கின்ற
ஓசையும், விரவிய செவி - விரவப் பெற்ற செவிகள், பிற விளி கொளல் இல - வேறு
ஒலிகளை ஏற்றுக் கொள்ளுதல் இலவாயின, ஏ : அசை, (எ - று.)

     பிறவிளி, இவற்றின் வேறாகிய தம்மயலார் விளிக்கும் ஓசை யெனினும் ஆம். களிறுகள்
செவிபுடைக்கும் ஒலியும், புரவிகள் அணிகல ஒலியும் மறவர் கழல் ஒலியும் விரவி
மிகுதலால் வேறு சிற்றொலிகளைச் செவிகள் ஏற்கில என்க.
 

( 114 )
 
941.

வளையவர் மனநிறை யழிதரு வடிவுடை
இளையவ ரிருபுற வுரைகளி னிடையிடை

    

 

     (பாடம்) 1. மனிசரு 2. கொளவிலவே.