பக்கம் : 611
 

 

 

திளையொடு நகைநனி சில1பல கனிவன
2விளைவுடை யவர்களும் 3விழைவுறு தகவே.
 

     (இ - ள்.) வளையவர் மனம் நிறை அழிதரு வடிவுடை - வளையல் அணிந்த
மகளிர்களின் உளச் செறிவாகிய நிறை என்னும் நலத்தை அழித்தற்குக் காரணமான அழகிய
உருவச்சிறப்பு வாய்ந்த, இளையவர் - இளமைமிக்க மறவர்கள் பேசும், இருபுறவுரைகளின் -
இரட்டுறத் தோன்றும் சிலேடை மொழிகளின், இடைஇடை - ஊடேஊடே, திளையொடு சில
பல கனிவன - நுகர்ச்சியோடே சிலவும் பலவுமாய்த் தோன்றுவனவாகிய, நனிநகை - மிக்க
நகைச்சுவைகள், விளையுடையவர்களும் விழைவுறும் தகவே - மெய்யறிவு விளைந்து
முதிர்ந்த சான்றோரும் விரும்பும் தகுதிப்பாட்டையுடையனவாக வுள்ளன, (எ - று.)

     பிறர் சொல்லாடுங்கால் அதனைத் தெரிந்துகொள்ள விழையாமை ஆன்றோர் குணம்.
மேலும்விருப்பும் வெறுப்புமில்லாதவர். அவ்விளைஞர்களின் சொல்லாட்டத்தின் ஊடே
தோன்றும் நகைச்சுவை அவ்வறிஞரையும் கவரும் தன்மையனவாக இருந்தன என்றவாறு,
திளையொடு - அநுபவித்தலோடு.
 

( 115 )
 
942.

குயிலுவ ரொலியொடு குடமுழ வதிர்வோடு
மயிலின மகளிர்த மவிநய மடநடை
அயிலிய லரசர்த மருகவை பெருகலின்
4இயலிய வளநக ரிடமிட மிலவே.
 

     (இ - ள்.) குயிலுவர் ஒலியொடு - நரப்புக் கருவியாளர் எழுப்பும் இசையுடனேயும்,
குடமுழ அதிர்வொடு - குடமுழா என்னும் தோற்கருவியின் முழக்கத்துடனேயும், அவிநயமடநடை - அவிநயம் பிடிக்கும் கூத்தியர் நடைபோலப் பொருந்திய மடப்பமுடைய
நடை பொருந்திய, மயில் இன மகளிர் தம் அவை - மயில்போன்ற அழகிய மகளிர்
தொகுதி, அயில்இயல் அரசர்தம் அருகு பெருகலின் - வேலேந்தும் இயல்புடைய
மன்னர்களின் பக்கத்தே வந்து மேலும்மேலும் பெருகுதலாலே, இயலிய வளநகர் -
இயல்பாகவே வளமுடைத்தாகிய அப்போதன நகரத்தின் இடம், இடமில - தெருக்களாகிய
இடங்கள் அக்கூட்டத்திற்குப் போதிய விரிவுள்ள இடமாக இல்லை, (எ - று.)

அவை - தொகுதி. இயலிய - இயல்பாகவே உடைய; அஃதாவது, நாடா வளத்தது என்றபடி.
குயிலுவர் - நரப்புக் கருவியாளர். மயிலின மகளிர் - மயில்போன்ற மகளிர்.
 

( 116 )

     (பாடம்) 1. பலகணிவன.2. வளையுடை. 3. விழுவுறு. 4. எயிலியல், இயலியல்.