பக்கம் : 612 | | சடிமன்னன் பயாபதியை எதிர்கொள எழுதல் | 943. | 1சுரமைய ரதிபதி வருவது மருசியி னருமைகொள் 2புகழவ 3னறிதலி னெதிர்கொள வரமிகு நெடுவரை மணிமுடி நெடியவ னுரமிகு 4புடையெழ வுரைநனி யரிதே. | (இ - ள்.) சுரமையர் அதிபதி - சுரமைநாட்டைப் புரக்கும் பயாபதி வேந்தன், வருவது - தன்னைக் காண வருகின்ற செய்தியை, மருசியின் - மரீசியென்னும் தூதனால், அருமைகொள் புகழவன் - வேறு பிறர் பெறற்கரிய சிறந்த புகழையுடைய சுவலனசடி வேந்தன், அறிதலி்ன் - அறிந்துகொண்டதனாலே, எதிர்கொள - அப்பயாபதியை எதிர்கொள்ளும் பொருட்டு, வரம் மிகு நெடுவரை - வரந்தரும் கடவுட்டன்மை மிக்க நெடிய இமயமலையை உடைய, மணிமுடி நெடியவன் - மணிகளாலியன்ற முடியுடைய சடிமன்னனுடைய, உரம் மிகு படைஎழ - ஆற்றல் மிக்க நால்வகைப் படைகளும் எழுந்தனவாக, உரைநனி அரிதே - அப்படையெழுச்சியினைக் கூறுதற்குச் சொற்கள் கிடைத்தல் மிகவும் அரிதாகும், (அப்படையெழுச்சியின் பெருமையை உரைக்கவியலாது என்றபடி,) (எ - று.) மருசியின் - மருசியினால். பயாபதி மன்னன் தன்னை எதிர்கொள வரும் செய்தியை மரீசியினால் உணர்ந்த சடி தன் பகுதிகளோடே அப்பயாபதிக்கு எதிர்செல எழுந்த பெற்றியைக் கூறச் சொற்கள் அரியன என்க. | ( 117 ) | | 944. | கருவரை வருவன வெனவுள களிறுகள் பெருவரை யருவிக ளெனவுள பெயர்கொடி அருவரை யடுபுலி யெனவுள ரிளையவர் பருவரை 5யிறைபுடை யெழுவதோர் 66படையே. | (இ - ள்.) களிறுகள் - யானைகள், கருவரை வருவன எனவுள - கரியமலைகள் புடைபெயர்ந்து வருவனபோன்றிருந்தன, பெயர் கொடி - இயக்கமுடைய கொடிகள், பெருவரை அருவிகள் எனஉள - பெரிய மலைகளில் அருவிகளை ஒத்திருந்தன, இளையவர் இளமையுடைய போர் மறவர்கள், அருவரை அடுபுலி எனஉளர் - ஏறற்கரிய மலைகளில் உறையும் புலிகளை ஒத்திருந்தனர் பருவரை இறை - பரிய இமயமலையின் அரசனான சடியின், புடையெழுவதொர் படை - பக்கத்தே எழுந்த படையின் தன்மை இத்தன்மைத்து, ஏ : அசை, (எ - று.) | |
| (பாடம்) 1. சுரமியரதிபதி வருமென மருசிசென். 2. புகழற். 3. கறைதலி. 4. படையெழ. 5. யிறைபடை. 5. படியே. | | |
|
|