பக்கம் : 613
 

      யானைகள் மலைகளை ஒத்தன, கொடிகள் அம்மலையருவியை ஒத்தன. மறவர்கள்
அம்மலையிடை உறையும் புலியை ஒத்தனர், என்க.
 

( 118 )

 
945.

நிலமிசை யவர்படை நிலநெளி வுறவரு
மலைமிசை யவர்படை மலைநெரி வுறவரு
மலைதிரை யொலிகட லவைபுடை பெயர்தரு
நிலைபெரி 1தரிதிப நெடுவரை நிரையே.
 

     (இ - ள்.) நிலமிசை அவர் படை - மண்ணவராகிய பயாபதி முதலியோர் படை,
நிலம் நெளிவுற வரும் - தாம் வாழுதற்கிடமான நிலம் நெளியும்படி வாராநிற்கும்,
மலைமிசையவர் படை - சடி முதலியோர், படை, மலைநெரிவு உறவரும் - தாம்
வாழ்தற்கிடமான மலைகள் நெரியும்படி வாராநிற்கும், அவை - அவ்விருவேறு படைகளும்,
புடை பெயர்தரும் அலைதரும் ஒலி கடல் - தத்தமிடத்தினின்றும் புடைபெயர்ந்து செல்லும்
இரு வேறு கடல்களையே ஒக்கும் ஆதலால்; இபம் நெடுவரைநிரை - இனித் திசை
யானைகளும் திக்குமலைகளும் ஆகிய வரிசைகள், நிலை பெரிது அரிது - தத்தமிடங்களிலே
நிலைத்து நிற்றல் மிகவும் அருமையே போலும், (எ - று.)

     இபம் - திக்கியானை. வரை - திக்குமலைகள். அவை பெயர்தரும் கடல் போன்றன
என உவமச்சொல் வருவித்துக்கொள்க. பயாபதி படை பூமி நெளியும்படி வந்தன: சடியின்
படை மலைகள் நெரிவுற இயங்கின. ஆதலின், திசையானைகளும் திசைமலைகளும்
நிலையுறல் அரிதாயிற்றென்க.
 

( 119 )

 

946.

முகிலிடை 2புகுமுறை புரவிக 3ளெனினவை
முகிலிடை புகுவதொர் முறைமையை யுடையன
வகிலிடு நுழை4புகை யவைகமழ் வனவெனி
னகிலிடு நுழைபுகை யவர்புக ழதுவே.
 

      (இ - ள்.) புரவிகள் - சடிமன்னன் படைக்கண் உள்ள புரவிகள், முகிலிடை
புகும்முறை எனின் - விஞ்சைப்புரவிகள் ஆதலின் விண்படர்ந்து மேகங்களினும் புகுவதோர்
முறைமையையுடையன என்றால், அவை - அப்பயாபதி வேந்தனின் புரவிகள் தாமும், அகில
இடுநுழை புகைமுகிலிடை புகுவதொர் முறைமையை உடையன - அகிற்கட்டையையிட்டு
எழீஇய நுழைந்து செல்லுதற்கியன்றவாறு செறிந்த மணப் புகையாகிய மேகபடலங்களினூடே
புகுந்து செல்லுமொரு முறைமையுடையனவாகவே இருந்தன, அவை - அப்புகை முகில்;
கமழ்வனஎனின் - மணமுடையனவாலோ எனின், அகில் இடுநுழை புகைஅது அவர்புகழ் -
அகிற்புகை முகில் மணமுடையது ஆதல்மேலும் அப்பயாபதியின் படையாளர்க்குப் புகழ்
தரும் தன்மைத்தே அன்றோ, ஏ : அசை, (எ - று.)


     (பாடம்) 1. தரிதிவணெடு. 2. புகுவன. 3. ளெனினிவை 4. புகைகமழ் தருவன வெனி.