பக்கம் : 614 | | சடியின் புரவிகள் முகிலிடை நுழைந்தன எனில், பயாபதியின் புரவிகளும் அகிலிடுபுகை முகிலூடே புக்கியங்கியன, என்க. | ( 120 ) | | 947. | வனமலர் பொழிவன மழைமுகின் மழைமுகி லினமலை ரிடையிடை விரைமழை சொரிவன 1கனமலி கழன்மணி வரையவ னுழையவ ரினமலி யமரரி 2னிழிவநர் சிறிதே. | (இ - ள்.) வனம்முகில் மலர்மழை பொழிவன - பூம்பொழிலாகிய மேகங்கள் மலர் ஆகிய மழையைப் பொழிவன வாயின, மழைமுகில் இனம் - மழை மேகங்களின் கூட்டங்களும், விரைமலர் இடைஇடை மழை சொரிவன - அம்மணமுடைய மலர் மாரியின் ஊடேஊடே மழைத்துளிகளைச் சொரிவன வாயின, கனம் மலிகழன் மணிவரையவன் உழையவர் - பொன்மிக்க வீரக்கழல் அணிந்த அழகிய மலைமன்னனாகிய சடியின் படைஞர், சிறிதே - மெல்லமெல்ல, இனம்மலி அமரரின் - கூட்டத்தால் மிக்க தேவர்களை ஒப்ப, இழிவநர் - பூமியின்கண் இறங்குவாராயினர், (எ - று.) மலர்மாரி மழைத்துளிகளின் இடையே, வானவர் பூமியில் இறங்குமாப் போலே, விச்சாதரர் நிலத்திடை இறங்குவாராயினர், என்க. | ( 121 ) | | 948. | அலர்மிசை யிளையவ ரடியிட வடியிட 3மிலைமிசை யியல்பவ ரியல்புக 4ளெழினல நிலமிசை யவரொடு நிலநடை படர்கென மலைமிசை யவரிறை யருளிய வகையே. | (இ - ள்.) மலைமிசையவர் இறை - இமயமலையிடத்தாராய விஞ்சையர் வேந்தன், நிலமிசையவரொடு - நிலத்தின்கண் வாழும் மனிதர்களோடு, நிலம் நடை படர்கென அருளிய வகையே - நிலத்தின்கண் இறங்கி நடந்து செல்வீராக என்று கட்டளையிட்டபடியே, மிசை யியல்பவர் - விண்ணின் இயங்குபவராகிய, இயல்புகள் எழில் நலம் இளையவர் - பல்வேறு பண்புகளும் அழகின் நன்மையுமிக்க அவ்விஞ்சையராகிய இளைய மறவர்கள், அலர்மிசை அடியிட அடிஇடம் இலை - பூவின்மேல் மிதித்து இறங்குதற்குக் கீழே இடம் இல்லையாயிற்று, (எ - று.) | |
| (பாடம்) 1. கனமலிமணி வரை யுடையவ னுழையவர். 2. விழிவது. 3. மலர்மிசை. 4. ளெனிலை. | | |
|
|