பக்கம் : 615 | | அலர் - பூ - ஆகலின் பரியாயத்தால் பூமியை அலர் என்றார். அடி - கீழ். பூமியின்கண் அடியிட - கீழிடம் இல்லையாயிற்று, என்க. மலையரையனாகிய சடிமன்னன் தமர்களை நிலத்தே செல்லுக எனக் கட்டளையிட்டபடியே, அவர் நிலத்திடை இறங்கியபோது, அவர் அடியிட்டிறங்க நிலமிடமிலதாயிற் றென்க. | ( 122 ) | | 949. | சங்குபோ லொளியவன் றாதை தன்படை கங்கைபோற் படர்ந்தது கலக்குங் காதலா லிங்குநீர் யமுனையி னிழிவ தொத்தது மங்குல்சேர் மணிவரை மன்னன் றானையே. | (இ - ள்.) சங்குபோல் ஒளியவன் தாதைதன் படை - சங்கினது நிறத்தை ஒத்த நிறமுடைய விசயன் தந்தையாகிய பயாபதியின் பெரும்படை, கங்ைகைபோற் படர்ந்தது - கங்கையாறு செல்வது போன்று சென்றது, மங்குல்சேர் மணிவரை மன்னன் தானை - முகில்தவழும் அழகிய இமயமலைக்கு அரசனாகிய சடியின் பெரும்படை, கலக்குங்காதலால் - அக்கங்கை யாற்றினோடு கலக்கும் ஒரு விருப்பத்தாலே, இங்கு - இவ்விடத்தே, யமுனையின் நீர் இழிவது ஒத்தது - யமுனையாற்றின் வெள்ளம் விரைந்து செல்லுதலை ஒத்துச் சென்றது, (எ - று.) பயாபதியின்படை கங்கையாற்றைப் போன்று படர்ந்தது; சடியின் படை அவ்வியாற்றிற் கலக்கும் யமுனைபோல விரைந்ததென்க. | ( 123 ) | | 950. | மாவியல் கடற்படை மயங்கி வானிடைப் பூவிய 1லிணரொடு கவரி பொங்கலாற் பாவிய பனித்திரைப் 2பரவை பாற்கடன் மேவிய விசும்பிடை விரிந்த தொத்ததே. | (இ - ள்.) மாஇயல் கடற்படை மயங்கி - யானை குதிரைகளாகிய விலங்குகளியங்கா நின்ற கடல்போன்ற இரண்டு பெரிய படைகள் பொருந்தியபொழுது, பூவியல் இணரொடு - வெள்ளிய பூக்கள் பொருந்திய கொத்துக்களோடே, கவரி வானிடை பொங்கலால் - வெண்சாமரைகளும் மிக்கு வெளியிடத்தே அசைதலால், பாவிய பனி திரை - விரிந்த தட்பமுடைய அலைகளோடு கூடிய, பரவைப் பாற்கடல் - அகன்ற திருப்பாற்கடல், மேவிய விசும்பிடை - பொருந்திய விண்ணில், விரிந்தது ஒத்ததே - பரவியதை ஒத்துத் தோன்றிற்று, (எ - று.) | |
| (பாடம்) 1. ரிணரொடு. 2. பரவைப் பாற்கடன் | | |
|
|