பக்கம் : 619 | | | 957. | 1மஞ்சிவர் 2மணிவரை மகளிர் சீறடி விஞ்சையந் தொழிலியல் 3விடுத்த மெல்லியற் பஞ்சின்மேன் மிதிப்பினும் 4பதைத்துப் பையவே அஞ்சிமே லிவர்வதற் கார்வஞ் செய்யுமே. | (இ - ள்.) மஞ்சிவர் மணிவரை மகளிர் - முகில்தவழும் அழகிய இமயமலைக்கண்வாழும் இயல்புடைய அவ்விச்சாதர மகளிர்களுடைய, விஞ்சையந் தொழில்இயல் விடுத்த மெல்லியல் சீறடி - விசும்பின்கண் இயங்குதலாகிய வித்தையாலியலும் தொழிலைவிட்டுத் (தரையின்பால் நடக்கத் தொடங்கிய) மென்மைத் தன்மையுடைய சிறிய அடிகள், பையவே - மெல்ல, பஞ்சின்மேன் மிதிப்பினும் பதைத்து - பஞ்சின்மேலே மிதித்துச் செல்லும் பொழுதும் பொறாது நடுங்கி, அஞ்சி - அச்சமுற்று, மேல் இவர்தற்கு - மீண்டும் விசும்புவழிச் செல்லுதற்கு, ஆர்வம் செய்யும் - விருப்பத்தை உண்டாக்கும், (எ - று.) பஞ்சி - வழியில் விரிக்கப்பட்ட ஆடை. வானத்தே இயங்கும் தம் தொழிலைவிட்ட விஞ்சையர் மகளிர், நிலத்தே நடத்தற்கு மெல்லடி வருந்துதலாலே, மீண்டும் வானத்தே செல்ல எண்ணுவர், என்க. | ( 131 ) | பயாபதியும் சடியும் ஒருவரை ஒருவர் காண்டல் | 958. | மணிவரை யரசனு மகர மால்கட லணிவரை நிலமுடை 5யாணை வேந்தனும் கணிவரை பொழுதினாற் கண்ணுற் றாரரோ பணிவரை யிலாத்தொழிற் பரவைத் தானையார். | (இ - ள்.) மணிவரை அரசனும் - அழகிய மலையரசனாகிய சடியும், மகரமால் கடல் - மகரமீன்களையுடைய கரிய கடலாற் சூழப்பட்ட, அணிவரை நிலமுடை - அழகிய மலைகளையுடைய சுரமை நாட்டினை ஆள்கின்ற, ஆணைவேந்தனும் - ஆணைச்சக்கரத்தை உருட்டுகின்ற பயாபதி மன்னனும், பணிவரையிலாத் தொழில் - ஏவுதலாகியஒரு வரையறை யில்லாமலே தாமே அறிந்து செய்யும் தொழிற்றிறன் வாய்ந்த, பரவைத் தானையார் - கடல்போல விரிந்த படைகளோடு கூடியவர்களாய், கணிவரை பொழுதினால் - சோதிடர்கள் ஆராய்ந்து அறுதியிட்டுக் கூறியதொரு நல்ல முழுத்தத்திலே, கண்ணுற்றரரோ - ஒருவரை ஒருவர் கண்டார்கள், அரோ : அசை, (எ - று.). | |
| (பாடம்) 1. மஞ்சிலா. 2. அணிவரை. 3. லடுத்த. 4. பகைத்து. 5. யானை. | | |
|
|