பக்கம் : 623
 

கழலினார்க்கு என்றும் பாடம். புதிய ஒளி, அளவிறந்த மகிழ்ச்சியாற் றோன்றிய மெய்ப்பாடு.
சடியின்றம்பியும் மருகனும் பயாபதியைத் தொழுதனர். அவ்வழிப் பெருகிய அன்பால்
அவர்கள் புத்தொளி பெற்றார்கள் என்க.
 

(138)

 

965.

வெஞ்சுட ராழி யாளும் விறலவற் கிளைய தாதை
மஞ்சுடை விஞ்சை நாடன் மலரடி வணங்கி மற்ற
வஞ்சமில் புகழி னான்றன் மனத்தையும் 1வணங்கி யிட்டான்
செஞ்சுட ரிலங்கு பூணான் றிறற்2சிறீ பால னென்பான்.
 

     (இ - ள்.) வெஞ்சுடர் ஆழி ஆளும் விறலவற்கு இளைய தாதை - வெவ்விய
ஒளியையுடைய ஆழிப்படையைத் தாங்குபவனாகிய ஆற்றல் மிக்க திவிட்டனுடைய
இளந்தந்தையாகிய, செஞ்சுடர் இலங்கு பூணான் - ஞாயிற்று மண்டிலம் போலத் திகழ்கின்ற
அணிகலன்களையுடைய, திறல் சிறீபாலன் என்பான் - ஆற்றல் மிக்க சிறீபாலன் என்னும்
வேந்தன், மஞ்சுடை விஞ்சை நாடன் மலரடி வணங்கி - முகில் தவழும் விச்சாதர
நாட்டரசனாகிய சடிமன்னனின் மலர்போன்ற திருவடிகளை வணக்கம் செய்து, மற்ற
வஞ்சமில் புகழினான்றன் - மேலும் வஞ்சகவழியானன்றி நன்னெறிக்கண் நின்றீட்டிய
புகழுடைய அச்சடி மன்னனுடைய, மனத்தையும் - நன்மனத்தையும், வணங்கியிட்டான் -
தன்மனத்தாலே பெரிதும் போற்றித் தொழுதான், (எ - று.)

மனத்தைத் தொழுதலாவது அம்மனத்தின் பெருந்தகைமை குறித்து அதனை நன்கு மதித்தல்.
சிறீபாலன் என்னும் பயாபதியின் றம்பியும் சடிமன்னனை வணங்கி, அம் மன்னன்றன் மாசில்
மனத்தையும் மதிக்கலானான் என்க.
 

( 139 )

 

966.

ஆய்நதசீ ரரச ராங்குக் கலந்தபின் னமுத வெள்ளம்
பாய்ந்தது பரவை நன்னீர்ப் பாற்கடல் 3பரந்த தேபோல்
ஏந்திய காதல் கூர வெழினகர் 4பெயர்ந்து புக்கார்
காந்திய கனகப் பைம்பூட் கருவரை யனைய தோளார்.
 

     (இ - ள்.) ஆய்ந்தசீர் அரசர் ஆங்குக் கலந்தபின் - ஆராய்தற்குரிய பெரும்புகழ்
படைத்த இருபால் வேந்தர்களும் அவ்வாறு அளவளாய்க் கலந்த பின்னர், அமுதவெள்ளம்
பாய்ந்தது - அன்பால் பொங்கிய அமிழ்தத்தை ஒத்த இன்பம் வெள்ளமாகப் பெருகிப் பாயா
நின்றது, பரவை நன்னீர் பாற்கடல் பரந்ததேபோல் - விரிந்த நன்னீர்க்கடல்
திருப்பாற்கடலின்
 

 

     (பாடம்) 1. வணக்கி. 2. சிற. 3. கலந்த. 4. பெயர்த்தும், பெயர்த்துப்.