பக்கம் : 624
 

கண்ணே புக்குக் கலந்ததே போன்று, ஏந்திய காதல்கூர - இருபகுதியாரும் வேற்றுமை
தோன்றாவாறு மிக்க அன்பாலே கேண்மைகொண்டு, பெயர்ந்து எழில் நகல் புக்கார் -
அவ்விடத்தினின்றும் புறப்பட்டு அழகிய நகரத்திற் புகுந்தனர், (அவர் யாரெனில்) காந்திய
கனகபயைம்பூண் கருவரை அனையதோளார் - சுடருகின்ற பொன்னாலாய பசிய
அணிகலன்களையுடைய கரிய மலை போன்ற சடிமன்னனும் பயாபதியும், (எ - று.)

பரவை நன்னீர்ப் பாற்கடல் - விரிவுடைய நல்ல நீர்மை பொருந்திய பாற்கடல்
எனக்கொண்டு அப்பாற்கடல் பரந்ததேபோல் எழினகர் பெயர்ந்து புக்கார் என முடிப்பதும்
ஒன்று.
 

(140)

 

967.

1எழில்கொள்கந் தனைய திண்டோ ளிளையரோ டரச ரீண்டிப்
பொழிலகந் தழீஇய சோலைப் பொன்னர்க் கோயில் புக்குத்
தழுமலர்க் கோதை நல்லார் பலாண்டிசை ததும்ப வாழ்த்தச்
செழுமலர்த் திரள்க டாழுஞ் சித்திர கூடஞ் சேர்ந்தார்.
 

     (இ - ள்.) எழில்கொள்கந்து அனைய திண்தோள் இளையரோடு - அழகு மிக்க
தூணையொத்த திண்ணிய தோள்களையுடைய விசயதிவிட்டர் முதலிய இளைஞர்களுடனே,
அரசர் ஈண்டி - மன்னர்கள் சேர்ந்து, பொழிலகம் தழீஇய சோலைப் பொன்னகர்க்
கோயில்புக்கு - பூம்பொழிலின் ஊடே ஒருபுடை பற்றிய திருநிலையகம் என்னும்
சோலைக்கண்ணதாகிய அழகிய பொன்னாலியன்ற நகராகிய அரண்மனையிலே புகுந்து,
தழுமலர்க்கோதை நல்லார் இசை ததும்பப் பலாண்டு வாழ்த்த - பிணைந்த மலர்மாலை
புனைந்த மகளிர்கள் இனிய இசை பெருகி ஒழுகும்படி பல்லாண்டு பாடி வாழ்த்தெடுப்ப,
செழுமலர்த் திரள்கள் தாழும் - செழிப்புடைய மலர்க்குழாங்கள் சிதராநின்ற, சித்திரகூடம்
சேர்ந்தார் - சித்திரகூடத்தை எய்தினர், (எ - று.)

சித்திரகூடம் சடிமன்னன் பொருட்டு இயற்றப்பட்டது முன்னர்க் கூறப்பட்டது.
 

( 141 )

 

968.

வெள்ளொளி யெயிற்றுப் பேழ்வாய் விரியுளை யரச சீயம்
ஒள்ளொளி தவழ வேந்து மொளிமணி யணையின் 2மேலோர்
கள்ளொளி கமழுங் கோதை மகளிர்கள் கவரி வீசத்
3தெள்ளொளிக் குமர ரோடு மிருந்தனர் திருந்து வேலோர்.

    

 

     பாடம்) 1. எழிலகந். 2. மேலார். 3. தொள்ளொளி.