பக்கம் : 628 | | அருக்க கீர்த்தியுடன் விசய திவிட்டர்கள் நகர்க்குச் செல்லல் | 973. | அன்னண மரசர் பேசி யிருந்தபின் னருக்க னோடும் பொன்னணி புரிசை வேலிப் புதுநகர் புகுக வென்று மன்னவ குமரர் தம்மை மணிவரை யரைச னேவப் பின்னவர் வேழ மேறிப் பெயர்ந்தனர் போது கின்றார். | (இ - ள்.) அன்னணம் அரசர் பேசியிருந்தபின் - அவ்வாறு சடி, பயாபதி வேந்தர்கள்தம்முள் அளவளாய்ப் பேசியிருந்த பின்னர், மணிவரையரசன் - அழகிய மலையரசனாகிய சடிமன்னன், மன்னவ குமரர்தம்மை - அரசமக்களாகிய விசயதிவிட்டர்களை நீவிர், அருக்கனோடும் - அருக்க கீர்த்தியோடு, பொன்னணி புரிசைவேலிப் புதுநகர் புகுக என்று - பொன்னால் அழகு செய்யப்பட்ட மதில்களை வேலியாகவுடைய - புத்தழகு மாறாத போதன நகரத்தே செல்வீராக என்று, ஏவ - ஏவுதலாலே, பின் அவர் வேழம் ஏறிப் பெயர்ந்தனர் போதுகின்றார் - பின்னர் அம்மூவரும் யானைகளிலே ஏறிச்செல்வாராயினர், (எ - று.) அவ்வாறு சடிமன்னனும் பயாபதி மன்னனும் அளவளாவிய பின்னர்ச் சடிமன்னன், விசயதிவிட்டர்களை அருக்ககீர்த்தியோடே நகர்க்குப் போக எனலும் அம்மூவரும் யானையேறிப் போகா நின்றனர், என்க. | ( 147 ) | | 974. | ஆயிடை யரச சீய மனையவர் பெயரும் போழ்தின் வேயுடை யருவிச் சாரல் வெள்ளிவேய் விலங்கு நாடன் தீயுடை யிலங்கு வேலான் றிருமக ளமிர்தின் சாயல் வீயுடை 1யலங்கன் 2ஞான்ற மிடைமணி விமானஞ் சேர்ந்தாள். | (இ - ள்.) ஆயிடை - அப்பொழுது, அரசசீயம் அனையவர் - அரசசிங்கங்களை ஒத்த அம்மூவரும், பெயரும் போழ்தின் - செல்லும்பொழுது, வேயுடை அருவிச்சாரல் - மூங்கிற்காடுகளையுடைய அருவிபாயும் தாழ்வரை பொருந்திய, வெள்ளிவேய் விலங்கல் நாடன் - வெள்ளியால் மூடப்பட்டாற்போன்று விளங்குகின்ற இமயமலைக் கண்ணவாகிய நாடுகளுக்கு அரசனும், தீயுடைய இலங்குவேலான் - தீக்கான்று ஒளிரும் வேலுடையானும் ஆகிய சடிமன்னனின், திருமகள் - செல்வமகளும், அமிர்து - பெறற்கரிய அமிழ்தத்தை ஒத்தவளும், இன் சாயல் - இனிய தோற்றத்தையுடையவளும் ஆகிய சுயம்பிரபை, வீ உடை அலங்கல் ஞான்ற மணிமிடை விமானஞ் சேர்ந்தாள் - | |
| (பாடம்) 1. யலங்க. 2. ஞான்ற. | | |
|
|