பக்கம் : 630
 

(இ - ள்.) ஆயத்துள் அலர்கொம்பு அன்னாள் - அம்மகளிர் கூட்டத்துள் வைத்துப் பூத்த
மலர்க்கொம்பை ஒத்தவளாகிய, அமிர்தமா பிரபை என்ற - அமிர்தபிரபை என்று பெயர்
கூறப்படுகின்ற, வேய்ஒத்த பணைமென்றோளி - மூங்கிலை ஒத்த பரிய
தோள்களையுடையாள், மணிமிடை கபாடம் நீக்கி - மணிகள் செறிந்த கதவுகளைத் திறந்து,
நங்கை - சுயம்பிரபாய், வாயிற் கண் வருக - ஈண்டு வாயிலிடத்தே வருவாயாக, வளநகர்
காண்க - வளம் மிக்க இந்நகரத்தின் எழிலைக் காண்பாயாக!, என்று - என்றுகூறி அழைத்து,
கோயிற்கண் அருகுசெல்லும் - தம்கன்னிமாடத்தின் அண்மையிற் செல்கின்ற, குமரரைக்
காட்டினாள் - விசய திவிட்டர்களைச் சுயம்பிரபைக்குக் காட்டுவாளாயினாள், (எ - று.)

அமிர்தபிரபை சுயம்பிரபையை அழைத்துக் கபாடம்நீக்கி, வாயிற்கண் வருக என்று
குமரரைக் காட்டினள் என்க.
 

(150)

 

977.

விண்ணதிர்த் தனைய வாகித் திசைமுகஞ் சிலம்ப வீங்கிக்
கண்ணதிர் முரசுஞ் சங்குங் கடல்பெயர் முழக்க மாக
மண்ணதிர் கொள்ளச் செல்லு மைந்தர்கள் யார்கொ லென்னும்
எண்ணதிர் 1மனத்தி னாட்குத் தோழிமற் றிதனைச் சொன்னாள்.
 

     (இ - ள்.) கண்அதிர் முரசும் சங்கும் - கண்ணிடத்தே அதிர்தலையுடைய முரசும்
சங்குகளும், விண் அதிர்த்தனைய ஆகி - விசும்பை அதிரச்செய்வன போன்று ஆகி,
திசைமுகம் சிலம்ப வீங்கி -திக்குகளில் எல்லாம் ஒளியுண்டாகப் பெருகி, கடல் பெயர்
முழக்கம் ஆக - கடல் கொதித்தெழுந்து ஆரவாரிப்பது போல்
ஆரவாரிப்புடையனவாகுமாறு, மண் அதிர்கொள்ள - நிலம் அதிரும்படி, செல்லும்
மைந்தர்கள் யார்கொல் என்னும் ஈண்டுச்செல்கின்ற இவ்விளைஞர்கள் யாவர்கொலோ என்று
ஐயுறுதலால், எண்ணதிர் மனத்தினாட்கு - எண்ணம் பிறழ்தலுடைய மனத்தோடுநின்ற
சுயம்பிரபைக்கு, தோழி - அமிர்தபிரபை, இதனைச் சொன்னாள் - பின்வருமாறு
சொன்னாள், (எ - று.)

கதவைத் திறந்து குமரர் செல்லுதலைக் காட்டியவுடன், இத்துணை ஆரவாரத்துடனே
செல்லும் இவர்கள் தாம் யாவரோ ! என்று அறிய அவாவும் சுயம்பிரபைக்கு, அமிர்தபிரபை
பின்வருமாறு கூறினள் என்க.
 

( 151 )

அமிர்தபிரபை அருக்ககீர்த்தி விசயதிவிட்டர்
ஆகிய மூவரையும் காட்டல்

978.

முன்னவ னம்பி வெய்யோன் பெயரவன் முழவுத் தோளான்
பின்னவன் சுரமை வேந்தன் பெருமக னவற்குத் தம்பி

    

 

     (பாடம்) 1. மனத் தளாகித் தோழிதானிதனை.