பக்கம் : 631 | | | | கன்னவில் வயிரத் தோளான் கருமுகி லுருவக் காளை யின்னவ னென்ன லோடு மிலங்கொளி முறுவல் கொண்டாள். | (இ - ள்.) முன்னவன் நம்பி - சுயம்பிரபாய்! ஈண்டுச்செல்வாருள் வைத்து முன்னர்ச்செல்லும் நம்பி, வெய்யவன் பெயரவன் - அருக்ககீர்த்தி ஆவன் (என்பது நீ அறிதியன்றே), முழவுத் தோளான் பின்னவன் - மத்தளம் போன்ற தோள்களையுடைய அவ் அருக்ககீர்த்தியின் பின்னர்ச் செல்பவன், சுரமைவேந்தன் பெருமகன் பயாபதி மன்னனின் முதல் மகனாகிய விசயன் என்பவன் ஆவான், இன்னவன் - இறுதியிற் செல்லும் இவன் யாரென்னில், அவற்குத் தம்பி - அவ்விசயனுக்குத் தம்பியும், கல்நவில் வயிரத்தோளான் - கல்லையொத்த உறுதியுடைய தோள்களையுடையவனும், கருமுகில் உருவக்காளை - கரிய மேகம் போன்ற நிறமுடையவனும் ஆகிய திவிட்டன் ஆவான், என்னலோடும் - என்று அமிர்தபிரபை இயம்பியவுடனே, இலங்கொளி முறுவல்கொண்டாள் - சுயம்பிரபை விளங்குகின்ற ஒளியையுடைய புன்முறுவல் பூத்தனள், (எ - று.) அருக்ககீர்த்தியைச் சுட்டிப் பின்னர் விசயனையும் சுருங்கக் கூறித் திவிட்டனை மட்டும் விளக்கமாகக் கூறுதல் காண்க. பெருமகன் - மூத்தமகன். | ( 152 ) | சுயம்பிரபை திவிட்டன்பாற் செல்லும் கண்களைத் தடைசெய்ய லாற்றாது மயங்குதல் | 979. | நீலமா மணிக்குன் றேய்ப்ப நிழலெழுந் திலங்கு மேனிக் கோலவா 1யரச காளை குங்குமக் குவவுத் தோளான் மேலவா நெடுங்2க ணோட மீட்டவை விலக்க மாட்டாள் மாலைவாய் குழலி சால மம்மர்கொண் மனத்த ளானாள். | (இ - ள்.) நீலமாமணிக் குன்று ஏய்ப்ப - மரகதமணி மலையைப்போன்று, நிழல் எழுந்து இலங்கும் மேனி - ஒளிவிரிந்து திகழும் நீலமேனியையுடையவனும், கோலவாய் அரசகாளை - அழகிய திருவாய்மலரினனாகிய அரசன் மகனும் ஆகிய, குங்குமம் குவவுத் தோளான்மேல் - குங்குமம் அப்பிய திரண்ட தோளையுடைய திவிட்டன்பால், அவாம் கெடுங்கண் ஓட - காட்சி விதுப்புற்ற தன் நெடிய கண்கள் ஓடுவனவாக, அவை மீட்டு விலக்க மாட்டாள் - அங்ஙனம் வலிந்து ஓடும் தன் கண்களை மீட்க இயலாதவளாய், மாலைவாய் குழலி - மலர்மாலை பொருந்திய கூந்தலையுடைய சுயம்பிரபை, சாலமம்மர்கொள் மனத்தள் ஆனாள் - மிகுந்த காம மயக்கமுடைய நெஞ்சுடையவளாயினள், (எ - று.). | | |
|
|