பக்கம் : 639
 


“மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்“ (குறள் - 1253)

என்னும் குறட்கருத்தை ஈண்டுக் காண்க.

 

(164)

இதுவுமது

991.

காதலார் 1திறத்துக் காத 2லாக்கிய காத லாரை
ஏதிலார் போல நோக்கி னிருமடங் காக 3வெய்தும்
போதுலாஞ் சிலையி னான்றன் பொருகணைக் கிலக்கஞ் செய்யு
மாதலாற் காம நோய்க்கோ ரருமருந் தில்லை யன்றே.
 

     (இ - ள்.) காதலார் திறத்து - காதலாரிடத்தே, காதல் ஆக்கிய காதலாரை -
அக்காதலைத் தோற்றுவித்த காதலரை, ஏதிலார்போல நோக்கின் - (காதல் தோற்றப்பட்ட
காதலார்,) அயலார்போல் வைத்துக் காணப்புகின், இருமடங்காக எய்தும் - அப்போது
அக்காட்சியால் அந்நோய் இருமடங்கு மிகாநின்றது, ஆதலால் - அந்நோயின்றன்மை
அங்ஙனமாதலால், போதுலாம் சிலையினான்றன் - மலரம்புகள் பயிலும் கருப்புவில்லியாகிய
மதவேளினது, பொருகணைக்கு - போர்அம்பிற்கு, இலக்கம் செய்யும் - இலக்கம் ஆக
ஆக்கிவிடுகின்ற, காமநோய்க்கு - காமம் என்னும் பிணிக்கு, ஓர் அருமருந்து இல்லை -
அக்காதல் ஆக்கினார் மருந்தாதலின்றி வேறாக ஒரு மருந்துதானும் இல்லை, அன்றே :
அசை, (எ - று.)

இலக்கம் - இலக்கு மரம்; அம்பெய்து பயில்தற்பொருட்டு நடப்படும் முருக்கமரம்.

“மருந்து பிறிதின்மைநற் கறிந்தனை சென்மே“ (நற். 247)
“மருந்து பிறிதில்லையவர் மணந்த மார்பே“ (குறுந்.68 -4)
“மருந்து பிறிதின்மையின் இருந்துவினை யிலனே“ (அகம்-147)
“மருந்திற் றீராது,,, நீதரவந்த நிறையழி துயரம்“ (நம்பி-சூ.127 மேற்.)

என வருவனவற்றாலும் இக்கருத்தை அறிக.
 

( 165 )

காமநோய்க்கு அரண் பிறிதிலை எனல்

992.

தேமிடை 4கானல் வேலிச் செழுமணற் குவாலுங் குன்றும்
பூமிடை தடமுங் காவும் புக்கவர்க் கரண மாகா
தாமுடை மனமுங் கண்ணு நிறைவுந்தம் பால வாகா
காமுடை மனத்தி னார்கட் கியாருளர் களைக ணாவார்.
 

    

 

     (பாடம்) 1. திறத்திற். 2. லரக்கிய. 3. செய்தும். 4. காவல்.