பக்கம் : 644 | | தோன்றிப் புலம் கொண்டது - விளக்கமுடைய தன்முகத்தே புதுவதொரு நகைதோன்றிப் புறத்தார்க்குப் புலனாந்தன்மை எய்திற்று, அதனைக்காப்பான் - அந்நகையை அயலார் அறியா வண்ணம் காக்கும் பொருட்டு, பூவொன்று நெரித்துமோந்தாள் - ஆண்டயலிற்கிடந்ததொரு மலரை விரல்களால் நெகிழ்த்து மோப்பாளாய் அந்நகையை மறைத்தாள், (எ - று.) அம்மகளிர் அடைந்து வலங்கொண்டு வணங்கியபொழுது, இவர்கள் எம்பெருமானின் ஏவன் மகளிர் என்று எழுந்த எண்ணத்தாலே, தன்முகத்தே புதிய ஒளியாகிய மெய்ப்பாடு தோன்றப், புறத்தே கிடந்த பூவினை மோப்பாளாய் அதனைப் பிறர் காணாதபடி மறைத்தாள் என்க. | (172) | | 999. | விண்விளக் குறுக்குந் திங்கட் சுடர்நுதல் விளக்கி னாலும் பெண்விளக் குறுக்கு மேனி பெருகிய வொளியி னாலும் பண்விளக் குறுக்கு மின்சொற் பாவையப் பாவை மாரைக் கண்விளக் குறுக்கு 1மாற்றாற் காண்டலுக் கரிய ளானாள். | (இ - ள்..) விண் விளக்குறுக்கும் திங்கள் சுடர்நுதல் - விசும்பை விளக்கம் செய்யும் திங்களைஒத்த ஒளிபொருந்திய நெற்றியினது, விளக்கினாலும் - ஒளியினாலும், பெண் விளக்குறுக்கும் மேனி பெருகிய ஒளியினாலும் - பெண்மையைப் பெரிதும் சிறக்கச்செய்யும் தன் திருமேனியினின்றும் மிக்குத்தோன்றும் ஒளியினாலும் தன்பேரழகை, பண் விளக்குறுக்கும் இன்சொற் பாவை - பண்போன்ற இன்பத்தை விளைக்கும் இனிய சொல்லையுடைய சுயம்பிரபை, அப்பாவைமாரை - அம்மகளிருடைய, கண் விளக்குறுக்கும் ஆற்றால் - கண்ணைக் கூசச்செய்யுமாற்றால், காண்ட லுக்கு அரியள் ஆனாள் - அவர் காண்பதற்கு அரியளாயிருந்தாள், (எ - று.) கண் விளக்குறுத்தல் - கண் கூசச்செய்தல். நுதலின் ஒளியாலும், மேனி ஒளியாலும், பாவை அவர் காண்டற்கு அரியளானாள் என்க. | ( 173 ) | அமிர்தபிரபை அருக்ககீர்த்தி விசயதிவிட்டர் ஆகிய மூவரையும் காட்டல் | 1000. | செஞ்சிலம் பொலிக்குஞ் செல்வச் சீறடித் தெய்வப் பாவை பஞ்சிலங் கணையின் மேலாள் பரந்தொளி திருவில் வீச மஞ்சிலங் குருவ 2வானின் மழையிடை நுடங்கு மின்போ லஞ்சிலம் படியி னார்த மறிவினை யயர்வித் திட்டாள். | (இ - ள்.) செஞ்சிலம்பு ஒலிக்கும் செல்வச்சீறடி - செவ்விய சிலம்பு ஆரவாரிக்கும் செல்வமிக்க சிறிய அடிகளையுடைய, தெய்வப்பாவை - தெய்வமகள் ஆகிய சுயம்பிரபை, பஞ்சு இலங்கு அணையின் மேலாள் - | |
| (பாடம்) 1. மாதோ. 2. வாளின். | | |
|
|