பக்கம் : 648
 

அமிர்தபிரபையின் விடையை மாதவசேனை பாராட்டல்

1005.

ஆங்கவண் மொழிந்த போழ்தி னணங்கினை வணங்கி மற்றத்
தீங்கனி யமிர்த மன்ன திருமொழிப் பண்ணி காரம்
வாங்குநீ ருலகங் காக்கு மன்னவன் பட்டத் தேவி
ஓங்கிருங் கற்பி னாளுக் குய்ப்பனென் றுணர்த்திப் போந்தாள்.
 

     (இ - ள்.) ஆங்கு அவள் மொழிந்த போழ்தின் - அவ்வாறு அமிர்த பிரபை
கூறியவுடனே, அணங்கினை வணங்கி - அம் மாதவசேனை சுயம்பிரபையைத் தொழுது,
மற்று அத்தீங்கனி அமிர்தம் அன்ன திருமொழிப் பண்ணிகாரம் - நுங்கள் விடையாகிய
இனிய கற்பகக்கனியையும் அமிழ்தத்தையும் ஒத்த இனிமையுடைய திருமொழியென்னும்
தின்பண்டத்தை, வாங்குநீர் உலகம் காக்கும் மன்னவன் பட்டத்தேவி - வளைந்த கடலாற்
சூழப்பட்ட உலகத்தைக் காவல் செய்கின்ற பயாபதி மன்னனின் கோப்பெருந்தேவியாகிய,
ஓங்கிருங்கற்பினாளுக்கு உய்ப்பன் - புகழால் ஓங்குதலுடைய பெரிய கற்புத்திறம்பூண்ட
நும்மாமியாரடிகள்பால் சேர்த்துவன், என்று உணர்த்திப்போனாள் - என்று அறிவித்துப்
போவாளாயினள், (எ - று.)

அமிர்தபிரபையின் சொற்றிறத்தை உயர்ந்த மாதவசேனை அச்சொல்லை “தீங்கனி யமிர்தம்
அன்ன திருமொழிப் பண்ணிகாரம்Ó என்று போற்றும் அழகு பெரிதும் சுவை யுடைத்தாதல்காண்க.
 

( 179 )

 

1006.

பளிங்கியல் பலகை தன்மேற் பாவைய துருவந் தான்முன்
தெளிந்தவா றெழுதிக் கொண்டு செந்துகி லுறையின் மூடி
வளந்தரு கோயின் முன்னி மணிவண்ணற் பயந்த தேவி
அளந்தறி வரிய கற்பி னமிர்தனா ளருகு சேர்ந்தாள்.
 

     (இ - ள்.) பளிங்கு இயல் பலகை தன்மேல் - பளிங்காலியன்ற பலகையின்கண், தான்
முன் தெளிந்தவாறு - மாதவசேனை முன்னர்த் தன் உள்ளக்கிழியில் தெளிந்து
எழுதியவாறே, எழுதிக்கொண்டு - பொறித்து, செந்துகில் உறையின் மூடி -
அவ்வோவியத்தைச் செம்மை நிறமான துகிலாலாய உறையுட் செறித்துமூடி எடுத்துக்கொண்டு,
வளந்தரு கோயின் முன்னி - வளம்பொருந்திய அரண்மனையை எய்தி, அளந்து அறிவரிய
கற்பின் அமிர்தனாள் - கணித்தறிய வொண்ணாப் புகழுடைக் கற்புடையாளும், அமிழ்தம்
போன்ற குணநலம் உடையவளும், மணிவண்ணற் பயந்த தேவி - திவிட்ட நம்பியை ஈன்ற
கோப்பெருந்தேவியும் ஆகிய சசிதேவியின், அருகுசேர்ந்தாள் - பக்கத்தை அடைந்தாள், (எ
- று.)ள் மனத்தள் ஆனாள் - மிகுந்த காம மயக்கமுடைய நெஞ்சுடையவளாயினள், (எ -
று.).