பக்கம் : 651
 

     (இ - ள்.) பழுது இயல் இலாத பாவை - குற்றத்தன்மை ஒரு சிறிதேனும் இல்லாத
சுயம்பிரபையின், உருவம் ஓர் படியினாலும் - உருவத்தை எவ்வாற்றானும், யார்க்கும்
எழுதுதற்கு அரிது - எத்தகைய ஓவியம்வல்ல புலவர்க்கும் எழுதுதல் இயலாது, இலங்கொளி
உருவமேனி - திகழ்கின்ற ஒளிபடைத்த சுயம்பிரபையின் உருவத்திருமேனியின் நலத்தை,
மொழிதலுக்கு அரிது ஆல் - (எழுத்தோவியத்தால் எழுதுதற்கு அரிதாவதுமன்றி)
சொல்லோவியத்தானும் சொல்லிக்காட்டலும் இயலாது, அத்தை - அத்தகைய உருவநலத்தை,
முருகுவேய் குழலி - மணம் பொருந்திய அளகத்தையுடைய கோப்பெருந்தேவியே, மற்றுன்
தொழுதகை அருளின் அன்றே - உன்னுடைய தொழத்தகு சிறப்புடைய அருள் வலி
என்பால் உண்மையால் அல்லவோ, யான் துணிந்து எழுதிற்று - யான்
ஒருவகையிற்றுணிவுகொண்டு எழுதியதூஉம், என்றாள் - என்று இயம்பினாள், (எ - று.)

நங்கையின் எழில் உருவத்தைச் சொல்லாற் சொல்லவும் இயலாது; அத்தகைய அழகுடைய
உருவத்தை எழுதவல்லார் யாரே உளர் ! யான், நின் திருவருள்வலத்தால் ஒருவாறு
வரைந்தேன் என்றாள், என்க.
 

( 184 )

மாதவசேனை சுயம்பிரபையின்
வணக்க மொழியினைக் கூறல்
1011.

அல்லது மடந்தை தோழி யவளது முகத்தி னாலோர்
சில்லணி மழலைச் செவ்வாய்த் திருமொழி பிறந்த துண்டு
1வல்லிதன் மொழிபோய் நீரெம் மாமியா ரடிகட் கெம்வாய்
எல்லையில் 2கிழமை தன்னா லிறைஞ்சுக வென்ப தென்றாள்.
 

     (இ - ள்.) அல்லதும் - அதுவேயுமன்றி, மடந்தை தோழியவளது முகத்தினால் -
சுயம்பிரபையிடத்துத் தன் தோழியாகிய அமிர்த பிரபையின் வாயிலாய், சில் அணிமழலைச்
செவ்வாய் ஓர் திருமொழி பிறந்ததுண்டு - சிலவாகிய அழகிய மழலைமாறாத செவ்விய
வாயின்கண் ஒப்பற்ற நன்மையிற் சிறந்த மொழியும் தோன்றியதுண்டு, வல்லி தன் மொழி -
அச் சுயம்பிரபையின் அத்திருமொழி யாதெனின், நீர்எம் மாமியாரடிகட்கு - நீவிர் சென்று
எம்முடைய மாமியாராகிய பெரியார்க்கு, எம்வாய் எல்லையில் கிழமை தன்னால் -
எம்முடையனவாகிய அளவிறந்த முழு உரிமையை நீயிர்கொண்டு, இறைஞ்சுக என்பது -
“யாம் தொழுமாப்போலே எம்பொருட்டுத் தொழக்கடவீர்Ó என்பதேயாம், என்றாள் - என்று
மாதவசேனை இயம்பினாள், (எ - று,)


     (பாடம்) 1. வல்லிதின் மொழிந்து நீயெம். 2. கீழ்மை.