பக்கம் : 652
 

அதுவேயுமன்றி, சுயம்பிரபை தன் தோழியின் வாயால் கூறிய திருமொழியும் ஒன்றுண்டு;
அது யாதெனில், “யாம் வணங்கும் உரிமையை நீயிர் கொண்டு, எம் மாமியாரடிகளை
எம்பொருட்டு வணங்குக' என்பதாம், என்றாள் என்க.
 

(185)

சசிதேவி, சுயம்பிரபையின் ஓவியத்தைத் தழீஇ மகிழ்தல்

1012.

என்றவண் மொழிந்த போழ்தி னிலங்கொளிப் பலகை தன்மேல்
மின்றவழ் மேனி யாளை மென்பணைத் தோளிற் புல்லி
இன்றினி தாகு மன்றே யிருந்தவப் பயங்க ணம்பால்
ஒன்றின விளைந்த வென்றாங் கொளியினாற் புதிய ளானாள்.
 

     (இ - ள்.) என்று அவள் மொழிந்த போழ்தில் - இவ்வாறு மாதவசேனை கூறியவுடன்,
இலங்கொளிப் பலகை தன்மேல் - திகழ்கின்ற ஒளியையுடைய அப்பளிக்குப் பலகையின்
மேலே வரைந்த, மின்றவழ் மேனியாளை - ஒளி தவழ்கின்ற உருவமுடைய சுயம்பிரபையின்
ஓவியத்தை, மெல்பணைத் தோளில் புல்லி - தன் மெல்லிதாய்ப் பருத்த தோளிலே
பொருந்தக்கொண்டு தழீஇ, இருந்தவப் பயங்கள் நம்பால் ஒன்றின விளைந்த - யாம்
ஆற்றிய பெரிய நோன்பின் பயன்கள் அனைத்தும் ஒருசேரத் திரண்டனவாகித் தோன்றின
ஆதலானே, இன்று இனிதாகும் அன்றே - இந்நாள் ஏனைய நாள்களையும் காட்டில்
இனிமை மிக்க நன்னாளே ஆகும் அல்லவா, என்று - என்று கூறி, ஒளியினால்
புதியளானாள் - விம்மிதத்தால் உண்டாகிய புதிய ஒளியைப்படைத்துப் புதியவள்போல்
தோன்றினாள்,
(எ - று.)

மாதவசேனை அவ்வாறு கூறியவுடன், அவ்வோவியப் பலகையைத் தழீஇ, “இருந்தவப்
பயன்கள் ஒன்றின விளைந்த இன்று இனிதாகும் என்றான், என்க.
 

( 186 )

சசிதேவி அவ்வோவியத்தைத்
திவிட்டனுக்குக் காட்டுக எனல்

1013.

போதவி ழலரி நாறும் புரிகுழ லுருவப் பாவை
சோதிசூழ் வடிவு நம்பி சுடர்மணி வண்ணன் காண
மாதவ சேனை காட்ட வல்லையோ வென்ன வையற்
1கோதுவ துணரி னன்றே யடிகள்யா முருவ மென்றாள்.

    

 

     (பாடம்) 1. ஓதுவ திவணை யன்றே யடிகள் யாமுணரி என்றாள்.