பக்கம் : 654 | | மாதவசேனை, தொழுது, போகி, வாயில் நண்ணி, இசைத்துப்புக்கு, கைகூப்ப, ஏற்று நீவந்தது? என்ன, இற்றெனச் சொன்னாள், என்க. | ( 188 ) | மாதவசேனை நினக்கோர் அருங்கலம் கொணர்ந்துளேன் எனல் | 1015. | அருங்கல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய வன்றிப் பெருங்கல முடைய ரேனும் பிறர்க்கவை 1பேண லாகா 2இருங்கலி முழவுத் தோளா யெரிமணிப் பலகை மேலோர் நெருங்கொளி யுருவங் கொண்டு நின்னையா னினைந்து வந்தேன். | (இ - ள்.) உலகின் மிக்க அருங்கலம் - உலகத்தே பெறலரும் பெருஞ்செல்வமாகிய முடிக்கலங்கள், அரசர்க்கே உரிய அன்றி - மன்னர்களுக்கே உரிமையுடையன ஆதலன்றி, பெருங்கலம் உடையரேனும் - மிகுந்த செல்வமுடையராயினும், பிறர்க்கு - அரசரல்லாத மற்றோர்க்கு, அவை பேணல் ஆகா - அவ் வருங்கலங்கள் விரும்புதற்கு உரியன ஆகமாட்டா, இருங்கலி முழவுத் தோளாய் - பெரிய ஓசையையுடைய மத்தளம் போன்ற தோள்களையுடைய நம்பியே!, எரிமணிப் பலகைமேல் ஓர் நெருங்கொளியுருவம் கொண்டு - சுடர்மணிப் பளிக்குப் பலகையின்கண் எழுதப்பட்ட ஒளிசெறிந்த ஓவிய உருவம் (ஆகிய அருங்கலம்) ஒன்றைக் கைக்கொண்டு நின்னை யான் நினைந்து - இவ் வருங்கலத்திற்குரியார் யாரென ஆராய்ந்து நீயே உரியை யாவை என எண்ணி, வந்தேன் - அதனைக் கொண்டுவந்துள்ளேன், (எ - று.) உயரிய முடிக்கலன் அரசர்க்கே உரிய ஆகலால் தோளாய்! இப்பலகையில் ஓர் ஒளி உருவமாகிய அருங்கலம் கொண்டு, உன்னை நினைந்து வந்தேன், என்றாள் என்க. | ( 189 ) | திவிட்டன் அவ் வோவியங் கண்டு வியப்புறுதல் | 1016. | அப்படித் தாயிற் காண்பா மென்றன னரச நம்பி மைப்புடை நெடுங்க ணாளு மருங்குநின் றவரை நீக்கிக் கைப்புடைப் பலகை மேலாற் கன்னிய துருவங் காட்ட மெய்ப்புடை தெரிய மாட்டான் விருந்துகொண் மனத்த னானான். | | |
| (பாடம்) 1. பேச. 2. வருங்கலி. | | |
|
|