போர் செய்யத் தொடங்குவோர், படைவலி, காலம், முதலியவற்றை நோக்கி அவை சிறந்தவிடத்துக் “கொக்கின் குத்தொக்கÓ விரைந்து தொடங்குவரன்றே! அங்ஙனமே காமன் சுடுசரந் தொடுக்கலுற்றான் என்க. |
இது முதல் 5 செய்யுள் ஒருதொடர் (இ - ள்.) மண்ணியல் வளாகம் எல்லாம் - மண்திணிந்த உலகம் அனைத்தும், மகிழ்ந்து உடன் வணங்கும்போதும் - உவகையுடனே தன்னடியில் ஒருங்குகூடி வந்து வீழ்ந்து வணங்குகின்ற பொழுதும், நனி உள் மகிழ்தல் செல்லா - மிக்கு அகம் மகிழ்தலில்லாத, ஒளியுடையுருவக் காளை - பெருமிதமுடைய அழகான்மிக்க உருவமுடைய திவிட்டன், காதலாள் தன் கண்ணிய உருவம் கண்டே - தன் காதலாளாகிய சுயம்பிரபையின் உருவம் என்று கருதி உணரப்பட்ட அவ்வோவிய உருவத்தைக் கண்டே, வெண்ணெயின் குன்றம் தீயால் வெதும்புகின்றத னோடு ஒத்தான் - நெருப்புற்று வெதும்பி உருகும் வெண்ணெய்க் குன்றம் போன்று உள்ளம் உருகினான், (எ - று,) கண்ணிய உருவங்கண்டே உருகுவான் உண்மையுருவம் கண்டால் என்படும் என்பது கருத்து. |