பக்கம் : 658
 

(இ - ள்.) மாகத்து மதியம் அன்ன - விசும்பின் கண்ணதாகிய பிறையை ஒத்த, வாள் நுதல்
மடந்தை தன்னை - ஒளி பொருந்திய நெற்றியையுடைய சுயம்பிரபையின் ஓவியத்தை,
ஆகத்துள் அடக்கி - தன் மார்பினுள் பொருந்த வைத்து, மன்னும் மணி நுதல்
அழகுநோக்கி - நிலைபெற்ற மணியாலியன்ற சுட்டியினையுடைய நுதலின் அழகைக் கூர்ந்து
பார்த்து, நாகத்தை நடுக்கும் அல்குல் - பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய,
நங்கைதன் திறத்து - சுயம்பிரபை பொருளாக எழுந்த, காம வேகத்தை - காமநோயின்
கொடுமையை, வில்வலான் மெல்ல மெல்ல பெருக்கியிட்டான் - வில் வித்தையில் வல்லுநன்
ஆகிய திவிட்டன் படிப்படியாய் மிகும்படி செய்து கொண்டான், (எ - று.)

வில்வலான் - காமவேள் எனக்கொள்ளின், நோக்கி என்னும் எச்சத்தை நோக்க எனத்
திரித்துக்கொள்க. சுயம்பிரபையின் ஓவியத்தைத் தன் மார்போடே சேர்த்து, நுதலின்
அழகுநோக்கி நங்கை திறத்துத் தன்பால் எழுந்த காமவேகத்தை மிகுவித்தான் என்க.
 

(195)

மகளிர்கள் சுயம்பிரபையைக் காண வருதல்

1022.

குழலையான் றிருத்திக் கோதை சூட்டுவன் குறிப்புண் டாயின்
மழலைவாய் திறந்தோர் மாற்ற மருளுக மடந்தை யென்னும்
நிழலவாம் பகழி போலு நெடுங்கணோக் கென்னும் வெய்ய
வழலினா லளிய னாவி யடுவதோ வழகி தென்னும்.
 

     (இ - ள்.) யான் குழலை திருத்தி கோதை சூட்டுவன் - யான் நின் அழகிய கூந்தலை
நன்கு திருத்தி அதன்கண் பொருந்துமாறு மலர்மாலையும் புனைகுவன், மடந்தை - சுயம்
பிரபாய்!, குறிப்புண்டாயின் - அங்ஙனம் ஓர் எண்ணம் நினக்கும் உளதானால், மழலைவாய்
திறந்து ஓர் மாற்றம் அருளுக - மழலை மிழற்றுகின்ற நின் வாய் மலர்ந்து ஒரோவொரு
மொழி மாத்திரை இயம்புக!, என்னும் - என்று இரப்பான், அளியன் ஆவி - நின்னால்
புரந்தருளற் பாலனாகிய என்னுடைய உயிரைப் புரத்தலுமின்றி, நிழல் அவாம் பகழிபோலும்
நெடுங்கண் நோக்கு என்னும் - ஒளியை விரும்பும் அம்புபோன்ற நெடிய கண்களின்
பார்வை என்று அறியாதார் கூறுகின்ற, வெய்ய அழலினால் - கொடிய தீயினாலே,
அடுவதோ - தீய்த்துக் கொல்வதேயோ, அழகிது என்னும் - இச்செயல் மிக்க
அழகிதாயிருந்தது என்பான், (எ - று.)

அடுவதுதான் அழகோ எனினுமாம். யான் குழலைத் திருத்தி மாலை சூட்டுகேன்,
குறிப்புண்டாயின் ஒரு மாற்றம் அருளுக; பகழி போலும் கண்ணால் என்னை அடுவதோ !
என்றான் என்க.
 

( 196 )

 

1023.

சீறடிப் பரடு தோயுஞ் 1சிலம்பிணை 2திருந்த வைப்பன்
வீறுடை நங்கை 3வேந்தன் கவான்மிசை 4யிருத்தி யென்னும்
 


     (பாடம்) 1. சிலம்பினைத். 2. திருத்தி. 3. யேந்தன், யென்றன். 4. யிருக்க.