பக்கம் : 659 | | | | சேறுடைக் கோதை மேலாற் சிறந்துவார் கூந்தல் கையால் வேறிடத் 1துருவல் செய்ய விரும்பிய மனத்த னானான். | (இ - ள்.) வேந்தன் - திவிட்டநம்பி, வீறுடை நங்கை - சிறப்புமிக்க சுயம்பிரபையே !, கவான் மிசை யிருத்தி - நீ என் தொடையின்மேல் அமர்வாயாக, சீறடிப் பரடு தோயும் - உன்னுடைய சிற்றடிகளின் பரடுகளிலே உராய்கின்ற, சிலம்பினை - சிலம்புகளை, திருந்த வைப்பன் - திருத்தமுறச் செய்வேன் - என்பான் - என்று கூறுவான், மேலால் - மேலே, சேறுடைக் கோதை - நறுமணச் சாந்தோடு கூடிய மலர்மாலையால், சிறந்து - சிறப்புற்று, வார் கூந்தல் - நீண்ட அளகக் கற்றையை, வேறிடத்து கையால் உருவல் செய்ய - ஆங்கோர் இடம் தொட்டுத் தன்கையால் உருவுதலை, விரும்பிய மனத்தன் ஆனான் - விரும்புகின்ற நெஞ்சன் ஆயினான், (எ - று.) திவிட்டன் சிலம்பு திருத்துவல் கவான் மிசை யிருத்தி என்பான் கூந்தலைக் கையால் உருவப் பெரிதும் விரும்புவதன் என்க. | ( 197 ) | | 1024. | அந்துகி லசைத்த தோர்கை யவிழ்ந்தசை கின்ற தென்னும் பைந்தளிர் மேனி தன்மேற் பன்மணிக் கலங்க 2டீண்டுஞ் செந்தளிர் புரையு மேனிச் சேயிழை திறத்திற் காம வெந்தழல் கனல மூட்டி வில்வலான் 3மெலிய லுற்றான். | (இ - ள்.) அசைத்தது அந்துகில் - கட்டப்பட்டதாகிய அழகிய சேலை, ஓர் கை அவிழ்ந்து அசைகின்றது - ஒரு பக்கத்தே சிறிது நெகிழ்ந்து தளர்கின்றது, என்னும் - என்பான், பைந்தளிர் மேனி தன்மேல் - பசிய தளிர்நிறம் அமைந்த திருமேனியின்கண், பன்மணிக் கலங்கள் தீண்டும் - பல்வேறு மணிகளானியன்ற அணிகலன்களைத் தன்கையொற்றொடுவான், செந்தளிர் புரையும் மேனிச் சேயிழை திறத்தில் - செவ்விய தளிர்போன்ற திருமேனியையுடைய சுயம்பிரபையின் பொருட்டு, காம வெந்தழல் கனலமூட்டி - காமமாகிய வெவ்விய நெருப்பைக் கனன்று எரியுமாறு மூள்வித்துக்கொண்டு, வில்வலான் - வில்வல்லனாகிய திவிட்டன், மெலியலுற்றான் - வருந்துவானாயினான், (எ - று,) அவ்வோவியத்தில் துகில் ஒருசார் அவிழ்ந்தாற் போன்று வரைந் திருத்தலால் அவ்வாறு கூறினன் என்க. | ( 198 ) | ஞாயிறு மறைதல் | 1025. | வாளையா நெடுங்க ணல்லாண் மணவினை4தொடங்கு கால நாளையா னமர்க ளோடு சூழ்ந்துவந் தறிவ லென்று | | |
| (பாடம்) 1. திருவி லுற்று. 2. ளீண்டும். 3. மெலிவு சென்றான்.4. தொடங்குங் காலம். | | |
|
|