பக்கம் : 660
 

 

 

காளைபாற் பட்டு வெய்யோன் குடதிசைக் கனபொற் குன்றிற்
சூளிவா யருவி மாலைச் சுடர்முடிச் சென்னி சேர்ந்தான்.
 

     (இ - ள்.) வாள்ஆம் நெடுங்கண் நல்லாள் - வாள்போலும் நீண்ட கண்களையுடைய
சுயம்பிரபையின், மணவினை தொடங்கும் காலம் - திருமணச் செயல் தொடங்குகின்ற காலம்
, நாளை - நாளைக்கே யாம், யான் நமர்களோடு சூழ்ந்து வந்து அறிவல் - ஆதலின்
யானும் எனது சுற்றத்தார் சூழவந்து அத்திருமண விழாவினைக் கண்டு மகிழ்வேன், என்று -
என்று நினைத்து, காளைபாற்பட்டு - வருந்துகின்ற திவிட்டன் பக்கலிலே தானும் பட்டு
வருந்தியவனாய், வெய்யோன் - கதிரவன், குடதிசை கன பொன் குன்றில் -
மேற்றிசையிலுள்ள அத்தகிரியென்னும் கனவிய பொன்மலையிலுள்ள, சூளிவாய் அருவிமாலை
- சிகரத்திடத்தே அருவியாகிய மலர்மாலையை அணிந்துள்ள, சுடர் முடிச் சென்னி
சேர்ந்தான் - ஒளியுடைய கொடுமுடியின் தலையை எய்தினான், (எ - று.)
வாளை - ஐகாரம் சாரியை. சுயம்பிரபையின் மணவிழா நாள் நாளையே யாதலின் யானும்
தமருடன் வந்து காண்பேன் என்று கருதி ஞாயிறு குடதிசைமலையிற் சேர்ந்தான் என்க.
தமர் - திங்கள் முதலிய ஏனைச் சோதிடதேவர். மணவினையில் கோள் மீன் முதலிய கூடும்
முழுத்தம் உண்மை யறிக.
 

( 199 )

இதுவுமது

1026.

விண்ணிய லுருவ வீதி மேனின்று மிழிந்து வெய்யோன்
கண்ணியல் விலங்க னெற்றி கதிரென்னுங் கையி னூன்றி
மண்ணியன் மரத்தின் சாகை நுதிபிடித் தவையும் விட்டுப்
1பண்ணியல் பிறிதொன் றாகிப் பையவே மறைந்து போனான்
 

     (இ - ள்.) விண் இயல் உருவ வீதி மேனின்றும் இழிந்து - விசும்பின்கண் தான்
இயங்குதற்குரிய அழகிய வீதியினின்றும் இறங்கி, வெய்யோன் - கதிரவன், கண் இயல்
விலங்கல் நெற்றி - இடமகன்ற அத்தகிரியினது நெற்றியின்மேல், கதிர்என்னும் கையின்
ஊன்றி - தன் சுடர்கள் என்னும் கைகளை ஊன்றிக்கொண்டு, மண்ணியல் மரத்தின் சாகை
நுதி பிடித்து - மண்ணிடத்தே நிலைபெற்றுள்ள மரங்களின் கிளை நுனியைப்பற்றி,
அவையும் விட்டு - பின்னர் அவையிற்றையும் விட்டு, பண்இயல் பிறிது ஒன்றாகி - தன்
தொழிலின்றன்மை வேறாகிவிடும்படி, பையவே மறைந்து போனான் - மெல்ல மறைந்தான்,
(எ - று.)

 

     (பாடம்) 1. பண்ணிகை.