பக்கம் : 662
 

எஃகு - ஈண்டு வேல். பறவைகள் திறத்தின் இங்ஙனம் ஆய மாலை வள்ளலார் திறத்து
இங்ஙனமாயிற்று என்க.
 

( 202 )

இதுவுமது

1029.

காதலா ரகன்ற போழ்திற் கற்புடை மகளிர் போலப்
போதெலாங் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க
மீதுலாந் திகிரி வெய்யோன் மறைதலுஞ் சிறுவெள் ளாம்பற்
1றாதெலா மலர நக்குத் தம்மையே மிகுத்த வன்றே.
 

     (இ - ள்.) மீது உலாம் திகிரி வெய்யோன் மறைதலும் - விசும்பில் இயங்குதலுடைய
ஒற்றையுருள் உடைய கதிரவன் மறைந்தவுடனே. பொய்கைத் தாமரை - குளங்களிலுள்ள
தாமரை மலர்கள், காதலார் அகன்ற போழ்தில் - தம் காதற் கிழவர் தம்மைவிட்டுப் பிரிந்த
காலத்தே, கற்புடை மகளிர்போல - பிரிவாற்றாமல் அழகழிந்து தோன்றும் திண்ணிய
கற்புடைய குலமகளிர்களைப் போன்று, போதெல்லாம் குவிந்த - மலர்களெல்லாம் இதழ்கள்
கூம்பினவாய், பொலிவு நீங்க - அழகினை இழந்தனவாக, சிறு வெள்ளாம்பல் - சிறிய
வெள்ளிய ஆம்பல் மலர்கள், தாதெலாம் அலர நக்கு - பூந்துகள் விரியும்படி நகைத்து,
தம்மையே மிகுத்த அன்றே - தம்மைத் தாமே மிகைபடக் காட்டின. அன்றே : அசை, (எ -
று,)

“அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்Ó

என்னும் குறளை ஈண்டு ஒப்பு நோக்குக. தம்மைமிகுத்தல் - செம்மாத்தல். அயலார்
இடுக்கண் கண்டுவத்தல் கீழ்கள் இயல்பாகலின் சிறு வெள்ளாம்பல் என்றார், நகைத்தல் -
ஈண்டு மலர்தல்.
 

( 203 )

பிறைத் தோற்றம்

1030.

செய்யொளிச் செக்க ரென்னுஞ் செம்புனல் பரந்து தேறி
2வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னு மணிகொள் பொய்கை
மையிரு ளென்னுஞ் சேற்றுள் வளர்திங்கட் கதிர்க ளென்னு
மொய்யிளங் கமல நாள வளையங்கண் முளைத்த வன்றே.

    

 

     (பாடம்) 1. லாதெலா மலர்ந்த குற்ற மையமே மிகுத்த வன்றே. 2. வை யொளி.