பக்கம் : 664
 

 

 

துணைவாய சுரும்பிரங்க வரவிந்த
     வனத்துதிர்ந்த துகளுஞ் சீத்துத்1
திணைவாய கருங்குவளை திளைத்தசைக்குந்
     தென்றலுமொன் றுடைத்தே மாலை.
 

     (இ - ள்.) மணவாய மல்லிகையின் மதுநனைந்து - மணங்கமழ்தரும் வாயினையுடைய
மல்லிலை மலர்க்கண்ணதாகிய தேனிற்றோய்ந்து, வண்கனிகள் மதர்ப்ப வீசி -
வளப்பமுடைய கனிகள் செழிப்பனவற்றின் மேலே வீசி, இணர்வாய வனமுல்லை இதழ்வாரி
- கொத்துக்களையுடைய காட்டுமுல்லை மலரின் இதழ்களை அள்ளிக்கொண்டு, இளந்திங்கள்
கதிர் காலூன்றி - இளமையுடைய பிறையினது ஒளியாகிய நிலவில் பொருந்தி, துணைவு ஆய
சுரும்பிரங்க - காதற்றுணைமையாகிய பெடைகளையுடையவாகிய வண்டுகள் பாட,
அரவிந்தவனத்து உதிர்ந்த - தாமரைக் காட்டில் உதிர்ந்த, துகளும் சீத்து - பூந்துகளையும்
வாரிக்கொண்டு, திணைவாய கருங்குவளை திளைத்து - நெய்தற்றிணையின் கண்ணவாகிய
நீலோற்பல மலர்களினூடே அளைந்து, அசைக்கும் - இயங்குகின்ற, தென்றலும் ஒன்று
உடைத்தே மாலை - தென்றல் என்னும் ஒரு பொருளையும் உடைத்தாயிருந்தது
இம்மாலைக்காலம், (எ - று.)

ஒன்று இன்னல்தரும் ஒரு பொருள். துணைவு - துணைமை; துணைமையுடையனவாகிய
சுரும்பு என்க. மதுவில் நனைந்து வீசி, இதழ்வாரிக் கதிர் காலூன்றி, சுரும்பிரங்கத் துகளும்
சீத்துத் திளைத்து, அசைக்கும் தென்றல் என்க.
 

( 206 )

மாலையின் கொடுமை

1033.

மைபருகு நெடுங்கண்ணார் மணிமாட
     மிசையிட்ட வளைவாய்ப் பாண்டி
னெய்பருகு கொழுஞ்சுடரி னகிலாவி
     யிடைநுழைந்து நிழல்கால் சீப்பப்
பைபருகு மணியுமிழ்ந்து பணநாக
     2மிரை தேரும் பருவ மாலை
கைபெருகு காமநோ யுடையவர்க்கோர்
     கனல்போல வருமே காணில்.

    

 

     (பாடம்) 1. திணையாய. 2. மிகை தேரும்