பக்கம் : 665 | | (இ - ள்.) பை பருகும் மணி உமிழ்ந்து - பையின் உள்ளாற்பருக்கும் தன் மணியைக் கான்று, நிழல்கால் சீப்ப - அம்மணி இருளை அகற்ற, பணநாகம் - படத்தையுடைய பாம்பு, இரைதேரும் - அம்மணி ஒளியின்கண்ணே தன் இரைகளை ஆராய்கின்ற, பருவமாலை - பொழுதாகிய இம்மாலைக்காலம், காணில் ஆராய்ந்து காணுமிடத்தே, மைபருகும் நெடுங்கண்ணார் - மையுண்ணுகின்ற நெடிய கண்களையுடைய மகளிர்கள், மணிமாடமிசை இட்ட - மணிபதித்த மேனிலை மாடங்களிலே ஏற்றியிடப்பட்ட, வளைவாய்ப் பாண்டில் - வளைந்த வாயினையுடைய அகல்களின்கண், நெய்பருகு கொழுஞ்சுடரின் இடை - பெய்யப்பட்ட ஆன்நெய்யை உண்டு கொழுத்த விளக்குப் பிழம்புகளின் ஊடேயும், அகில்ஆவியிடை - அகிலிட்டெழீஇய மணப்புகையின் ஊடேயும், நுழைந்து - புகுந்து, கைபெருகு காமநோய் உடையவர்க்கு - சிறுமை மிகுதற்குக் காரணமான காமப்பிணி கொண்டவர்க்கு ஓர் கனல் போல வரும் - ஒப்பற்ற நெருப்புப் போன்று வருவதொன்றாயிருக்கும், (எ - று.) பருகும் மணி - பருக்கும் மணி. மாலை பாண்டில் நெய் பருகி அகிலாவி யிடைநுழைந்து, காமநோயுடையவர்க்குக் கனல்போல வரும், என்க. | ( 207 ) | இதுவுமது | 1034. | கணிமிடற்ற நறவேங்க யவிர்சுணங்கின் மடவார்தங் கைமேற் கொண்டு பணிமிடற்று மொழிபயிற்றும் பைங்கிளியின் செவ்வழியி னிசை மேற் பாட மணிமிடற்ற செங்கண்ண பவழக்காற் கபோதங்கண் மதலை தோறு மணிமிடற்றி னாலகவ வனங்கனையு 1மனல்விக்கு மளிய மாலை. | (இ - ள்.) கணி - காலங்கணித்தறிதற்கு ஏதுவாகிய, நறமிடற்ற வேங்கை - தேனை மிடற்றின் உண்உடைய வேங்கை மலர்போன்ற, அவிர்சுணங்கின் மடவார் - பொன்னிறமான திதலைபூத்துத் திகழும் மகளிர்கள் தம்கை மேற்கொண்டு - தம்முடைய கையின்கண் ஏந்திக்கொண்டு, பணிமிடற்று மொழி பயிற்றும் - அணிகலன்களையுடைய தம் கண்டத்தால் சொற்களைப் பயிற்றுவிக்கப்பட்ட, பைங்கிளி - பச்சைக்கிளிகள், இன் செவ்வழியின் - இனிய செவ்வழி என்னும் பண்ணால், இசை மேற்பாட - இசைபாடுதலை மேற்கொள்ளவும், மணிமிடற்ற - நீலமணி போன்ற கழுத்தையுடையனவும், செங்கண்ண - சிவந்த கண்களை யுடையனவும், பவழக்கால் - பவழம்போன்ற கால்களையுடையனவும் ஆகிய, | |
| (பாடம்) 1. மகல்விக்கும் - மகமவிக்கும். | | |
|
|