பக்கம் : 669 | | (இ - ள்.) அரும்பிவரும் அரவிந்தம் அரும்பித் தோன்றுதலையுடைய தாமரைமலர், அறிவானது அடிநிழல் அடைந்தோம் என்று - அருகனுடைய திருவடிநீழலை எய்தும் சிறப்பைப் பெறறோம் என்னும் களிப்பால், சுரும்புஇவரி இசைபாட - வண்டுகள் சூழ்ந்து இசை பாடாநிற்ப, செம்மாந்து - இறுமாப்புற்று, சுடருமிழ்ந்து - ஒளிகான்று, துளும்பும்போலும் - தேன் துளும்பாநிற்கும், சுரும்புஇவரி இசைபாடச் செம்மாந்து சுடர் உமிழ்ந்து துளும்பும் ஆயின் - நீழலடைந்த மாத்திரையானே தாமரை வண்டுகள் சூழ்ந்து தன் இசையைப் பாடாநிற்ப இறுமாப்புற்று ஒளிகான்று தேன்துளும்புவதாயின், விரும்பினரா தொழுதெழுவார் - அவ்வருகக்கடவுளின் சேவடிகளை விழைந்தவர்களாய் உறங் கியெழுமமயத்தும் தொழுதே எழுகின்ற அடியார்கள் எய்தும், மெய்மறப்பும் உள்மகிழ்வும் - தம்மை மறத்தலும் உள்ள மகிழ்தலுமாகிய இந்நிலை, வியப்போ ! அன்றே - வியத்தற்குரிய தொன்றன்று, (எ - று.) தாமரை அறிவரனது அடி சேர்ந்த நன்மையால், இசை பாடச் செம்மாந்து சுடருமிழ்ந்து துளும்பும் ; அஃதங்ஙனமாயின், அவனடியை விரும்பித் தொழுதெழுவார், மெய்ம்மறப்பும், உண்மகிழ்வும், வியக்கற்பாலன அல்லவே ! என்றாள், என்க. | ( 212 ) | | 1039. | அழலணங்னு 1தாமரையா ரருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலு நிழலணங்கி முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்று மாயிற் றொழிலணங்கு மனமுடையார் சூழொளியும் வீழ்குளிப்புஞ் சொல்லோ வன்றே. | (இ - ள்.) அழல் அணங்கு தாமரை - நெருப்புப் பிழம்பை ஒத்த தாமரை மலர், ஆர் அருள் ஆழி உடையகோன் - பொருந்திய அறவாழியையுடைய அருகக் கடவுளின், அடிக் கீழ் - திருவடித்தலத்தின்கீழே, சேர்ந்து - எய்தி, நிழல் அணங்கி - பிற ஒளியை வருத்தி, முருகு உயிர்த்து - மணம்வீசி, நிரந்து - பரவி, அலர்ந்து - மலர்ந்து, தோடுஏந்தி - இதழ்களைத் தரித்து, நிழற்றும் - ஒளிரும், நிழல் அணங்கி - பிற ஒளியை வருத்தி, முருகு உயிர்த்து - மணம்வீசி, நிரந்து - பரவி, அலர்ந்து - மலர்ந்து, தோடுஏந்தி - இதழ்களைத் தரித்து, நிழற்றும் ஆயில் - நிழற்றுதல் உளதாயின், தொழில் அணங்கு மனம் உடையோர் - அருகனுடைய பாதத்தைத் தொழுதலல்லது பிறதொழில் செய்தற்கு வருந்துமியல்புடைய நன்மனத்தையுடையோர்கள், சூழ்ஒளியும் வீழ்களிப்பும் சொல்லே அன்றே - சூழ்ந்த ஒளியுடையராதலும், மிக்க மகிழ்ச்சியுடையராதலும் வியந்துரைக்கற்பாலவல்ல, (எ - று.) | |
| (பாடம்) 1. தாமரை யருளாழி | | |
|
|