பக்கம் : 670 | | தாமரை, கோன் அடிக்கீழ்ச் சேர்ந்த நன்மையால் அணங்கி, உயிர்த்து, அலர்ந்து, ஏந்தி நிழற்றும், அஃதங்ஙனமாயின், அவன் அடியை நினைந்து வணங்கும் தொழில் ஒன்றே உடைய அடியார், ஒளியும், களிப்பும், வியக்கற்பால வல்லவே என்றாள், என்க. | ( 213 ) | | 1040. | மணிமரு டிருமொழி வாமன் சேவடி யணிமரு ளுருவுடை யமிர்தின் சாயலாள் பணிமொழி பலவுடன் பரவி வாழ்த்தினாள் பிணிமொழி பிறவிநோய் பெயர்க வென்னவே. | (இ - ள்.) அணிமருள் உருவுடை - அழகு மருள்தற்குக் காரணமான உருவத்தையுடைய, அமிர்து இன்சாயலாள் - அமிழ்தம் போன்று இனிய சாயலையுடைய சுயம்பிரபை, மணிமருள் திருமொழி - மணிகளை ஒத்த அறமொழிகளை உரைத்தருளிய வாமன் சேவடி - அருகனுடைய செய்ய திருவடிகளை, பணிமொழி பலவுடன் பரவி - இவ்வாறு பணிமொழிகள் பலவற்றைக் கூறுதலுடனே புகழ்ந்து, பிணிமொழி பிறவிநோய் - பிணியுடைத்தென அறிஞர்களால் கூறப்படுகின்ற பிறவியாகிய நோய், பெயர்க என்ன ஏ - அடியேங்கட்கு ஒழிவதாகுக என்று கூறி, வாழ்த்தினாள் - வாழ்த்துவாளாயினாள், ஏ : அசை, (எ - று.) “வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை“ என்பவாகலின், நங்கை பிறநலங்கள் வேண்டாது பிறவாமையே வேண்டினள் என்க. | ( 214 ) | சுயம்பிரபையின் காம வேட்கை. | 1041. | வென்றவன் றிருவடி வணங்கி மெல்லவே சென்றுதன் வளநகர்ச் செம்பொன் மாளிகை நின்றொளி விரிவதோர் நிலவு வேதிகை முன்றில்சென் றெய்தினாண் முகிழ்த்த வேட்கையாள். | (இ - ள்.) வென்றவன் - திருவடி - காமனைவென்ற வாமன் திருவடிகளை, வணங்கி - வாழ்த்தி வணங்கிய பின்னர், மெல்லவே - பைப்பய, சென்று - அங்கிருந்து சென்று, தன்வளநகர் செம்பொன் மாளிகை - தனது வளமுடைய கன்னிமாடமாகிய செவ்விய பொன்னாலியன்ற மாளிகையின்கண் உள்ள, நின்று ஒளி விரிவதோர் வேதிகை - நிலைத்து நின்று ஒளிவிரிக்கின்ற மேடையினையுடைய, நிலவுமுன்றில் சென்று எய்தினாள் - நிலா முற்றத்தே சென்றடைந்தாள், முகிழ்த்த வேட்கையாள் - இறைவணக்கம் செய்த பொழுதெல்லாம் அகத்தே அடங்கி யிருந்து அஃதொழிதலும் முகிழ்த்தலையுடைய காமவேட்கையையுடைய சுயம்பிரபை, (எ - று.) | | |
|
|