பக்கம் : 671
 

     கோயிலில் நின்று இறை வழிபாடு செய்யும் துணையும் அடங்கியிருந்து, செம்பொன்
மாளிகை எய்துதலும், பழைய எண்ணங்கள் கிளர்ந்தெழுதலின், முகிழ்த்த வேட்கையாள்
என்றார், என்க.
 

( 215 )

பிறை தோன்றல்

1042.

செய்யவன் செங்கதிர் சுருக்கச் செக்கர்வான்
பையவே கருகலும் பரவை பாற்கதி
ரையவே யவிர்கதி ரரும்பு வந்தது
வையமே தொழப்படும் வளர்வெண் டிங்களே.
 

     (இ - ள்.) செய்யவன் - ஞாயிறு, செங்கதிர் சுருக்க - தன் சிவந்த சுடர்களைச்
சுருக்கிக்கொள்ள, செக்கர்வான் பையவே கருகலும் - செவ்வானமும் மெல்ல
இருண்டுவிட்டதாக, வையமே தொழப்படும் - உலகெலாம் வணங்கும் சிறப்புடைய, வளர்
வெண்திங்கள் - வெண்மையான வளர்பிறை, ஐய அவிர்கதிர் - அழகியவாய்
விரிதலையுடைய வெண்சுடர், அரும்பு - அரும்பி, வந்தது - தோன்றுவதாயிற்று. ஏ நான்கும்
அசைகள்,
(எ - று.)
ஞாயிறு கதிர் சுருங்கச் செக்கர் வானம், மெல்ல மெல்ல மறைந்து கருக, வெண்டிங்கள்
அரும்பி வந்ததென்க.
 

( 216 )

 

1043.

இருங்கயத் 1தெழின்மலர் நிரந்து மேலதோர்
சுருங்கையங் 2கவிழ்ந்தெனத் தோன்று மீன்குழா
மரும்பிய பசலைவா னகட்டுத் தாரகை
யொருங்கியன் றொளிநகை யுமிழ நோக்கினாள்.
 

     (இ - ள்.) பசலைவான் அகட்டு அரும்பிய மீன்குழாம் - ஞாயிறாகிய கணவன் பிரிந்
தமையால் பசலைகொண்ட விசும்பின் கண் மலர்ந்த மீன் கூட்டம், இருங்கயத்து எழில்மலர்
நிரந்து எனத் தோன்றும் - பெரிய குளத்திலே மலர்ந்துள்ள மலர்கள் பரவியிருந்தாற்போலக்
காணப்பட்டது, தாரகை - அம்மீன்கள், ஒருங்கு இயன்று ஒளி நகை உமிழ - ஒருங்கே கூடி
ஒளியாகிய சுடரை வீசா நிற்ப, மேலதுஓர் சுருங்கை அங்கு
அவிழ்ந்தென நோக்கினாள் - மேனிலை மாடத்தின் கண்ணதாகிய பலகணியைத் திறந்து
அம்மலர்களை நோக்கினாற் போன்று நங்கை தன் கண்ணைத் திறந்து அம்மீன்களை
நோக்கா நின்றாள், (எ - று.)

 

     (பாடம்) 1. தடமலரலர்ந்து. 2. கவிழ்ந்து போன்று.