பக்கம் : 672
 

     கயம் - வானத்திற்கும், மலர் விண்மீன்கட்கும், மேனிலை மாடத்தின் கண்ணுள்ள
சுருங்கை சுயம்பிரபையின் கண்களுக்கும் உவமைகள். ஓர் : அசை. சுருங்கை என்னும்
உவமத்திற்குப் பொருள் வருவித்துக் கூறுக. என என்னும் உவமைச்சொல்லை நிரந்து
என்பதனோடும் ஒட்டுக. தாரகை - சுட்டுப்பெயர் மாத்திரையாய்நின்றது. மேலது மேனிலை
மாடம். இது தலைக்குவமை. கண்கள் தலையிடத்தனவாதலால் மேனிலைமாடத்தின்
கண்ணுள்ள பலகணியை உவமை எடுத்தார்.
 

( 217 )

 
1044.

திங்களங் கொழுநனைச் சேர்த்து தாரகை
யங்கொளி முகிழ்நகை யரும்பு மாதலான்
மங்கல மணமகன் 1மணந்த போதலா
லெங்குள திளையவர்க் கிளைமை யின்பமே.
 

     (இ - ள்.) திங்கள்அம் கொழுநனைச் சேர்ந்து - திங்களாகிய தம் அழகிய கணவனைக்
கூடியே, தாரகை - உடுக்கள், அங்கு ஒளி முகிழ் நகை அரும்பும் - அவ்விடத்தே
(தோன்றும் இன்பத்தால்) ஒளியுடைய முறுவல்பூக்கின்றன, ஆதலான் - அவ்வாறிருத்தலால்,
இளையவர்க்கு இளைமை மிக்க மகளிர்களுக்கு, மங்கலமணமகன் - நன்மை மிக்க காதலன்,
மணந்த போதலால் - உடனுறையும் காலத்தே உளதாவதன்றி, இளைமையின்பம் -
காதலின்பம்; எங்குளது - அவர் உடனுறைவிலாதபோது எவ்விடத்தும் உளதாகாது. ஏ :
அசை, (எ - று.)
விசும்பிடத்தே மீன்களும், தம் கணவனைக் கூடியே முறுவல் பூத்துத் திகழ்கின்றன;
காதலனைக் கூடிய விடத்தன்றி, மகளிர்க்கு இன்பம் வேறியாண்டுளது என்றாள், என்க.
 

( 218 )

 

1045.

என்றுதன் னகம்புடை 2யியலக் காளை3 யா
லொன்றிய வுள்ளநோ யொளிக்க லுற்றன
ளின்றிவ ளகத்தது காம 4நோயெனப்
பொன்றவழ் 5பசலைமெய் 6புகல லுற்றதே.
 

     (இ - ள்.) என்று தன் அகம்புடை இயல - என்றிவ்வாறு நினைந்து சுயம்பிரபையின் உள்ளம் நெகிழா நிற்பவும், காளையால் - திவிட்டன் காரணமாக, ஒன்றிய உள்ளநோய் - பொருந்திய உள்ளத்தின் கண்ணதாகிய காமநோயை, ஒளிக்கலுற்றனள் - புறத்தார்க்குப் புலனாகாமே மறைப்பாளாயினள், (அங்ஙனம் அவள் மறைத்தாளாயினும்,) பொன்தவழ் பசலைமெய் - பொன்னிறமான பசலைநிறம் பாய்ந்த அவள் உடலோ, இன்று

 

     (பாடம்) 1. மணந்து. 2. பெயரக். 3. பால். 4. நோயொடும். 5. பசலையும். 6. பொழிய.