இவள் அகத்து காமநோய் - இப்போது இச்சுயம் பிரபையின் உள்ளத்தே காமநோய் உளது என்று, புகலலுற்றது - தூற்றிப் புறத்தார்க்கு அறிவிப்பதாயிற்று. ஏ : அசை. (எ - று.) சுயம்பிரபை, தன்காமநோயை நனிமறைக்க முயன்றாள் எனினும், அவள் உடலிலே பாய்ந்த பசலை அந்நோய் உண்மையைப்புறத்தார் அறியத் தூற்றிற்று என்க. |
( 219 ) |
தோழியர்கள் இங்கித மொழிகள் |
1046. | ஆயின திருவனா ளாயத் தோழியர் வேயெனத் திரண்டதோள் விளங்கு மேனியாண் மேயின குறிப்பினை யறிந்து மெல்லவே 1பாயின பணிமொழி பலவுங் கூறினார். |
இது முதல், 9 செய்யுட்கள் ஒரு தொடர். (இ - ள்.) ஆயின திருவனாள் ஆயத் தோழியர் - அங்ஙனம் ஆகிய சுயம்பிரபையின் விளையாட்டு ஆய மகளிராகிய தோழிமார்கள், வேய் எனத் திரண்டதோள் விளங்கும் மேனியாள் - மூங்கில்போல் பணைத்த தோள்களையும் திகழ்கின்ற திருமேனியையும் உடைய சுயம்பிரபை, மேயின குறிப்பினை அறிந்து - மேற்கொண்டுள்ள உளக்குறிப்பை உணர்ந்தவர்களாய், பாயின - பணிமொழி பலவும் - விரிந்த பணிவுடைய இன்மொழிகள் அக்காமக் குறிப்புக்குப் பொருந்துவனவாகப் பலவற்றையும், மெல்லவே கூறினார் - செவ்வியறிந்து மெல்லப் பேசத் தொடங்கினார். (எ - று.) சுயம்பிரபையின் குறிப்பினை அறிந்த தோழியர், அதற்குத்தகப் பல இங்கித மொழிகள் பேசுவாராயினர், என்க. |
( 220 ) |
|
1047. | விஞ்சைய ருலகினு மினிது வீங்குநீர் மஞ்சிவர் பொழிலணி 2மண்ணென் றோதினா ளஞ்சில மொழியவ ளொருத்தி 3யாங்கயர் பஞ்சிலங் ககலல்குற் பாவை பாங்கினே. |
(இ - ள்.) அம்சில மொழியவள் ஒருத்தி - அழகிய சிலவாகிய இன்மொழியே இயம்பும் இயல்புடையாள் ஒருத்தி, ஆங்கு அயர் பஞ்சு இலங்கு அகல் அல்குல் பாவை பாங்கின் - அவ்விடத்தே காமநோயால் அயர்வுறுகின்ற அலத்தகம் ஊட்டிய அடியையும் அகன்ற அல்குற் றடத்தையும் உடைய சுயம்பிரபையின் அயலே நின்று, வீங்குநீர் மஞ்சுஇவர் பொழில் அணி மண் - மிக்க நீரையுடைய முகில்தவழும் பூம்பொழில் அழகு |
|
|
(பாடம்) 1. யாயின. 2. மண்ணின் பாலென. 3. கூறினாள். |