செய்கின்ற இச்சுரமை நாடு, விஞ்சையர் உலகினும் இனிது என்று ஓதினாள் - நம் விச்சாதரர் உலகத்தினும் காட்டில் பெரிது இனிதாகும் என்று இயம்பினாள். (எ - று.) சுயம்பிரபையின் எண்ணத்தை வேறுவழியிற் செலுத்தக் கருதி இவ்வாறு ஓதினாள் என்க. அழகாகப் பேசு மியல்புடையாள் ஒரு தோழி, இச்சுரமை நாடு நம் விச்சாதரருலகினும் மிக இனியதாம் என்றாள் என்க. திவிட்டநம்பியை உடைமையால் இனிதென்றல் குறிப்பு. |
(இ - ள்.) ஒருத்தி - இவள் கருதிய துணராத மற்றொருத்தி, பனிவரைப் பாங்கரும் பருவச்சோலையும் - குளிர்ந்த மலைசார்ந்த இடங்களும் மலரும் செவ்வியுடைய பூம்பொழிலும், தனியவர்க்கு நனி இனல் பயக்கும் - காதலரையின்றித் தனித்துறைவார்க்குத் துன்பத்தையே மிகுதியும் தோற்றுவிப்பனவாம், தன் மனக்கு இனியவர் எவ்வழி இசைவர் அவ்வழித் துனி வரவுஇல் - இவை கிடக்க; ஒருத்திக்குத் தன் மனதிற்கு இனியரான காதலர் எவ்விடத்தே தன்னொடு மணந்துறைவர் அவ்விடம் பாலையே யாயினும் துன்பம் உண்டாதலில்லை, எனச் சொல்லினாள் - என்று கூறினாள், (எ - று.) இவள் கூற்று சுயம்பிரபையின் இன்னலை மிகச் செய்யும் தன்மையுடைத்தாதல் அறிக. விச்சாதரருலகாக, சுரமைநாடே ஆக, யாதாயினும் என்னை ! தன் மனக்கினியர் எவ்வழி உடனுறைவர், அவ்வழி, பாலையேயாயினும் இனிதாம் ; இல்லெனில், துறக்கமே எனினும் இன்னலே தரும்; என்று உடனுறை இன்பத்தை எடுத்தோதினாள், என்க. |
(இ - ள்.) ஒருத்த - வேறொரு தோழி, காதலார் - தம்முள் வேற்றுமையின்றிக் கலந்த காதலர் இருவர், காதன்மை கலந்து - அக்காதற்றன்மை மிக்குத் தம்முள் தலைப்பட்டு, காதலர்க்கு ஏதிலார் அயலராய் இயல்ப ஆய்விடில் - அக்காதலர் தம் கூட்டரவிற்கு இடையூறு |