பக்கம் : 675
 

     செய்யும் ஆயமும் தாயரும் இன்னோரன்ன பிறரும் அவ்விடத்திலராய் ஒழியின்
அங்ஙனம் அமையப் பெற்ற இடத்தை நோக்க, சாதலும் பிறத்தலும் இலாத தானமும் -
சாவும் பிறப்பு மற்ற வீட்டுலகம் என்னும் அழிவிலாப் பேரின்பம் நல்கும் இடந்தானும்,
கோது எனக்கொண்மின் - சாறற்ற கோதுபோலத் தோன்றும் என்று எண்ணுங்கோள், என்று
கூறினாள் - என்று எடுத்தியம்பினாள். (எ - று.)

இவள் கூற்றில் அத்தகைய சிறந்த இடத்தைப் பெறப்போகும் சுயம்பிரபை அதை எண்ணி
மகிழ்தற்கு இடமுண்டுபோலும். சாதலும் பிறத்தலும் இலாத தானம் - வீட்டுலகு.

“தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு'
என்னும் திருக்குறளினும் இக் கருத்துண்மை காண்க.
 

( 223 )

 

1050.

திணைவிராய்ப் பொய்கையுந் திகிரிப் புள்ளினுக்
கிணையிராப் பிரிந்தபி னெரியொ டொக்குமாற்
றுணைவராற் றனியவர் திறத்துச் சொல்லினோர்
புணைவராம் படியவ ரில்லைப் பொன்னனீர்.
 

     (இ - ள்.) திணை விராய் பொய்கையும் - மருதத்திணை வளமெலாம் விரவிய
குளமும், திகிரிப் புள்ளினுக்கு - சக்கரவாகப்புட்களுக்கு, இணையிரா பிரிந்தபின் - தம்
காதற்றுணை தம்முடன் இராதனவாய்ப் பிரிந்துபோய பின்னர், எரியொடு ஒக்கும் -
நெருப்புப் போன்று சுடுவதாம், துணைவரால் தனியவர் திறத்துச் சொல்லின் - தம்
காதற்றுணைவர் (பிரிந்தமையாலே) தனித்துறைவார் கூற்றில் வைத்துக் கூறுங்கால், புணைவர்
ஆம்படியவர் இல்லை - அத்தனிமையோர் தம் துன்பவெள்ளத்தை நீந்தற்குப் புணையாந்
தன்மையுடையார் பிறர் யாரும் இலர், பொன்அனீர் - திருமகளே போலும் தோழியர்காள்
[என்று ஒருத்தி இயம்பினாள்,] (எ - று.)

துணை பிரிந்த சக்கரவாகத்திற்குக் குளிர்ந்த பொய்கையும் தீயைப் போன்று சுடுவதாம்;
துணைபிரிந்த மகளிரின் துயர் போக்க வேறு யாராலும் இயலாது என்றாள் என்க.
 

( 224 )

 

1051.

முல்லையின் முருகுகொப் புளித்து மூரல்வாய்
மல்லிகை யிணர்த்துணர் மயக்கு மாருதத்
தெல்லியு மிளம்பிறைக் கதிரு மென்பவான்
மெல்லிய 1லவர்களை மெலிவு 2செய்பவே.

    

 

     (பாடம்) 1. ரவர்களை. 2. செய்வவே, செய்யவே.