பக்கம் : 687
 

     (இ - ள்.) பிடியும் களிறும் பிறவும் நெரிவுற்று அடியும் இடஆம் இடமின்று -
பெண்ணியானைகளும் ஆணியானைகளும் குதிரை முதலிய பிறவுடம் கூடி நெருக்குதலாலே
தெருக்கள் ஓர் அடிதானும் வைத்தற்கு வேண்டிய சிறிதிடமும் இலவாயின, இலகும் கொடியும்
குடையும் குளிர்சாமரமும் முடியின் சுடரும் - திகழ்கின்ற கொடிக்குழாங்களும்
குடைக்குழாங்களும், குளிர்நல்கும் சாமரைக்குழாங்களும் முடிமுதலிய அணிகலன்களின்
ஒளிக்குழாங்களும், மிசைமூடின - விசும்பை நிறைத்தன, (எ - று.)

பிடி முதலியன நெரிவுற்று மண் அடியிட இடமில்லை; கொடி முதலியன நெரிவுற்று விண்
மூடின என்க.
 

( 247 )

மணமுரசு அறைதல்

1074.

வழுவின் னெறிவா மனமா நகர்வாய்
விழவின் னணமாக 1விதித் தனராய்க்
கழுவும் மணிபோல் பவடன் கடிநாள்
எழுவும் முரசெங் குமியம் பினவே.
 

     (இ - ள்.) வாமன மாநகர்வாய் - அருகபரமேட்டியின் திருக்கோயில்களில்,
இன்னணமாக விழவு வழுவில் நெறி விதித்தனராய் - இவ்வாறு திருவிழாக்களைக்
குற்றமின்றி நூல்கள் கூறிய வழியானே நிகழ்த்தினவர்களாய் இருக்கும்பொழுதே ஒருசார்,
கழுவும் மணி போல்பவள் தன் கடிநாள் - மாசுதீர்த்த மணியை யொப்பாளாகிய
சுயம்பிரபையின் திருமண நன்னாளை, எழவும் முரசு எங்கும் இயம்பின - இசை
யெழுப்புதலையுடைய முரசு எவ்விடத்தும் அறிவிப்பனவாயின, (எ - று.)

    வாமன் + அ. அ : ஆறாதவன் பன்மை உருபு. அருகபரமேட்டிக்கு விதிமுறை
விழாவெடுத்து, நங்கையின் மணநாளை, மாநகர்க்கு முரசறைந்து தெரித்தனர் என்க.
 

( 248 )

 

1075.

நடைமா லைநடந் ததுநந் திமுகம்
புடைமா லைபுகுந் தனர்புண் ணியநீர்
இடைமா லைநிகழ்ந் ததொரேத் தரவம்
கடைமா லைநிகழ்ந் ததுகாப் பணியே.
 

     (இ - ள்.) நந்திமுகம் - இறைவனுடைய திருவுருவத்தின் கண், புண்ணியநீர் -
மங்கலநீராட்டு, நடைமாலை - நடந்தது - நூல்களிற்கூறும் நிகழ்ச்சி முறையானே
நடத்தப்பட்டது, புடைமாலை புகுந்தனர் - இடங்கள்

 

     (பாடம்) 1. விதர்த்தனராய்க்.