பக்கம் : 688
 

     தோறும் நிரலாக மக்கள் புகுந்தனர், இடை - நடுவே, மாலை - நிரலாக, ஓர்
ஏத்தரவம் - மந்திரமொழி ஓதும் ஓர் இசை, நிகழ்ந்தது - நிகழலாயிற்று, கடைமாலை -
இறுதியில், காப்பு அணி நிகழ்ந்தது - காப்பதணிதலாகிய கரணம் நிகழலாயிற்று, (எ - று.)

நந்தி - அழிவற்றவன்; அருகன். முகம்: ஏழாவதன் உருபு, புண்ணியநீர் -மங்கலநீராட்டு.
காப்பணிதல் - இறுதியில் நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்ச்சி,
 

( 249 )

மணமுரசு அறைதல்

1076.

திரைசங் கொலியோ டுசிறந் தனபோன்
முரைசங் கொலியோ டுமுழங் கியெழ
உரைசங் கொலியோ டுணரா வகையா
லரைசங் கொலியோ டெழவார்த் தனவே.
 

     (இ - ள்.) அங்கு அரசு ஒலியோடு எழ - அவ்விட,த்தே மன்னர்கள் பல்லியங்களின்
இசையோடே எழாநிற்ப, முரசு ஒலியோடு முழங்கியெழ - முரசுகள் இசையோடு
ஆரவாரித்து எழ, அங்கு - அவ்விடத்தே, உரை சங்கு ஒலியோடு - கூறப்படுகின்ற
சங்கங்களின் முழக்கத்தோடே, உணராவகையால் - இது சங்கொலி இது முரசொலி
என்றின்னவகை வேற்றுமை உணரவியலாதபடி திரை சங்கொலியோடு சிறந்தன போல -
அலைகடல் ஒலி தன்னகத்தேயுள்ள சங்கங்களின் முழக்கோடே கலந்து சிறப்புற்று
முழங்குதலைப் போன்று, ஆர்த்தன - ஆரவாரித்தன, (எ - று,)

முரசங்கள் கடல் போன்று முழங்கின; அரைசர்கள் இன்னிசையோடே எழுந்தனர், என்க.
 

( 250 )

 

1077.

துணிமுத் தநகைத் துவர்வா யிளையார்
கணிமுத் தணிசிந் தியகண் விரவி
1மணிமுத் தமணற் றிடலா கிமறைத்
தணிமுத் 2துமிழ்வீ தியடுக் குநவே.
 

     (இ - ள்.) துணி முத்த நகை துவர்வாய் இளையார் - தெளிந்த ஒளியையுடைய
முத்தம் போன்ற பற்களையும் பவளம் போன்ற திருவாயையையுமுடைய இளமகளிர்கள்,
கணிமுத்தணி சிந்திய - ஆராய்ந்து
கோக்கப்பட்ட வடங்களை ஊடற்கண் அறுத்துதிர்க்கப்பட்ட முத்துக்கள், கண்விரவி -
வீதிகளிடந்தோறும் பரவி, முத்தமணி மணல் திடலாகி - முத்துமணிகளாகிய மணலாலியன்ற
திடர்போல ஆகி, மறைத்து - வீதியின்
இயங்குவாரைத் தடுத்து, அணிமுத்து உமிழ் வீதி அடுக்குந - ஆங்கு அழகுறுத்தப்பட்ட
முத்தமாலைகள் ஒளிவீசுதலையுடைய அவ்வீதிகளை எய்திக் கிடந்தன, (எ - று.)
 

 

     (பாடம்) 1. மணிமுற்ற. 2. துழவி.