பக்கம் : 691
 

     (இ - ள்.) அணி வேண்டினர் கொள்ள அடுத்தனவும் - அணிகலன் களை
விரும்பினவர் அவற்றைப் பெறுதற்கு உரிய இடங்களும், மணி வேண்டினர் கொள்ள
வகுத்தனவும் - மணி முதலிய பொருள் விரும்பினவர் அவற்றைக் கொள்வதற்கென
வகுக்கப்பட்ட இடங்களும், கணி வேண்டினநாள் கழியுந் துணையும் - சோதிடநூல்
வல்லுநரால் ஆராய்ந்து கூறப்பட்ட திருமணவினை நன்னாள்கள் கழியும் துணையும்,
பணிணே்டினர் - வீதி பரந்தனவே - அப்பணிகளிலே ஈடுபட்டவருடைய வீதிதோறும்
பரவியிருந்தன, (எ - று.)

வீதிகளில், ஆடை அணி முதலியன வேண்டுவார் வேண்டியாங்கு பெறுதற்கென வகுத்த
இடங்கள், அவற்றில் றொழில் செய்வாரோடே யாண்டும் விளங்கின, என்க.
 

( 256 )

 

1083.

நறவுண் டொருபா னகுவா ரொருபாற்
புறவுண் 1டகலா வமிர்தம் புணர்வார்
உறவுண் டமரத் 2தொடர்பா லுறைவார்
பிறவுண் 3டையுமின் னனபின் னினவே.
 

     (இ - ள்.) நறவுண்டு ஒருபால் நகுவார் - சிலர் ஒருசார் கள்ளுண்டு மகிழ்வர்,
வேறுசிலர் புறவுண்டு அகலா அமிர்தம் புணர்வார் - தம்மிற் புறம் போந்து ஒழியாக
அமிழ்தத்தைப் பொருந்தி உண்பார், அமரத் தொடர்பால் உறவுண்டு உறைவார் - ஒருசார்
சிலர் தேவர்களுடனே தொடர்புடைய உறவு கொண்டு வதிவார்கள், பிறவுண்டையும் -
பிறக்கூட்டங்களும் இன்னன - இவ்வாறே, பின்னின - ஒன்றோடு ஒன்று கலந்தன எங்கும்
கலந்து கிடந்தன, (எ - று,)

உண்டை - கூட்டம். கோவுண்டை (பாண்டி) என்புழியும் அஃதப் பொருட்டாதல் உணர்க.
நறவ முதலிய உணவை விரும்புவோர் விரும்பிய பொழுதே பெற்றுண்டு நகுவர்; சிலர்
அமரரோடே கேண்மை கொண்டு மகிழ்வர்; இங்ஙனமே கூட்டங்கள் எல்லாம் தம்முட்
பின்னின என்க. பின்னுதல் - கலத்தல்.
 

( 258 )

 

1084.

இழிகின் றனர்விஞ் சையரெத் திசையும்
பொழிகின் றதுபொன் மழையும் மழையுட்
சுழிகின் றது 4தொல் சனவெள் ளமதற்
கொழிகின் றதுநா முரையா ததுவே.
 

     (இ - ள்.) இழிகின்றனர் - அந்நகரத்தே இழிந்தோர் யாரெனில், விஞ்சையரே -
விச்சாதரரே, பிறரில்லை; எத்திசையும் பொழிகின்றது - எல்லாத் திக்குகளினும் சிதறுகின்றது
(யாதெனில்) பொன்மழையே யாம்,

 

     (பாடம்) 1. டகளா யமிர்தம். 2. தொடுபா, தொருபா. 3. டியு. 4. பல்.