பக்கம் : 692
 

     சுழிகின்றது (யாதெனில்) - சுழிகின்றது அப்பொன் மழையுள், தொல்சன வெள்ளமே -
அப்பொன் மழையினூடே திரண்ட மக்கள் வெள்ளமே, அதற்கு ஒழிகின்றது - அந்நகர்க்கு
இயலாது ஒழிகின்ற சிறப்பியாதெனில், அது நாம் உரையாததுவே - அது எம்மால்
கூறாமல்எஞ்சியதே யாகும், (எ - று.)
இழிகின்றனர் - இழிவுடையோர் - இறங்குபவர். பொழிதல் - சிதறுதல் -
துன்பமுதலியவற்றார் சிதறுபவர் இல்லை என்றபடி, சுழிதல் - வருந்துதல், சுற்றுதல்.
ஒழிகின்றது - ஒழிகின்ற மாண்பு, யாம் கூறாமையால் அங்கில்லை என்றபடி.

     (இ - ள்.) எத்திசையும் - எல்லாத் திசைகளிலும், விஞ்சையர் - விச்சாதரர்கள்,
இழிகின்றனர் - வந்து இறங்குவாராயினர், எத்திசையும் - எல்லாத் திசைகளிலேயும்,
பொன்மழை - பொன்மாரி, பொழிகின்றது - பெய்யாநின்றது, அம்மழையுள் - அப் பொன்
மழையின் ஊடே, சுழிகின்றது தொல்சன வெள்ளம் - சுழித்துத் தேங்கியது பழைய மக்கட்
கூட்டம், அதற்கு - அந்நகரத்திற்கு, ஒழிகின்றது - பொருந்தாமல் ஒழிவது யாதெனில், யாம்
உரையாதது - எம்மால் கூறப்படாமையால் ஒழிந்த மாண்பே, (எ - று.)

இங்ஙனம் பொருள் கூறினும் பொருந்தும்.
 

( 258 )

 

1085.

தாமரைமு 1கத்தமனி யக்குடம வற்றாற்
சாமரைமு கத்தனம தக்களிறு தம்மேற்
பூமரைமு கத்தெறிபு னற்றிரைமு கந்து
தூமரைமு கத்தரசர் சென்றுபலர் சூழ்ந்தார்.
 

     (இ - ள்.) தூமரைமுகத்து அரசர் பலர்சென்று - தூய தாமரைபோலும்
மலர்ந்த முகங்களையுடைய மன்னர் பலர் சென்று, தாமரை முகத் தமனியக்குடம் அவற்றால்
- தாமரை மலர்போன்ற வாயையுடைய பொன்னாலியன்ற குடங்களால், மரைப்பூ முகத்து
எறிதிரைப் புனல் முகந்து - தாமரைப் பூக்களைத தம்பாலுடைய அலையெறியும்
கடவுட்புனலை முகந்து கொண்டு, சாமரை முகத்தன மதக்களிறு தம்மேல் - சாமரைகளால்
அணியப்பட்ட முகத்தையுடைய யானைகளின் மேற்கொண்டு சூழ்ந்தார் - வந்து
மொய்த்தனர், (எ - று.)
மன்னர் தமனியக் குடத்தால் கடவுட்புனல் முகந்துகொண்டு முகமகிழ்ச்சியுடனே, களிறுகள்
மேலேற்றிக் கொணர்ந்தவர் சூழ்ந்தார், என்க.
 

( 259 )

     (பாடம்) 1. கத்தன மணிக்குட.