பக்கம் : 693 | | | 1086. | வண்டுபடு மாலையர்ம டப்பிடிக டம்மேன் 1மண்டயலு ழைக்கலம ழைக்கண்மட வார்க ளெண்டிசையு 2மெங்குமிட மின்றிமிடை வுற்றார் கண்டவரை மேல்விரவு கார்மயிலொ டொத்தார். | (இ - ள்.) வண்டுபடு மாலையர் - வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையை யணிந்தவராய், மண்டு மழைக்கண் உழைக்கல மடவார்கள் - செல்லாநின்ற குளிர்ந்த கண்களையுடைய உழைக்கல மகளிர்கள், மடப்பிடிகள் தம்மேல் - இளைய பெண் யானைகளின் மேல் ஏறி, எண்டிசையும் எங்கும் - எட்டுத்திசைகளினும் யாண்டும், அயல் இடம் இன்றி - வேறு இடமில்லாதபடி, மிடைவுற்றார் - நெருங்கினவர்கள், கண்ட வரைமேல் விரவு கார்மயிலோடு ஒத்தார் - காணப்பட்ட மலைகளின் மேல் மேவிய நீல மயில்களின் கூட்டத்தைப் போன்று காணப்பட்டனர், (எ - று.) உழைக்கல மகளிர்கள் மாயைணிந்து பிடிகளிலே வந்தோர், மலைமேலே விரவும் நீலமயில்களை ஒத்தார் என்க. கார் மயில் - கார் காலத்தே களிப்புற்ற மயிலுமாம். மலைக்கு மடப்பிடியும் மகளிர்க்கு மயிலும் உவமை. | ( 260 ) | | 1087. | மாளிகைநி ரைத்தமணி மாடநகர் முன்னா லாளியர சேந்துமணி 3யாசனம தன்மேற் காளைகழல் வேந்தர்பலர் சூழ்தரவி ருந்தா னாளொடுபொ லிந்தநகை மாமதிய மொத்தான். | (இ - ள்.) காளை - திவிட்டநம்பி, மாளிகை நிரைத்த மணி மாடம் நகர்முன்னால் - மாளிகைகள் மிக்கு நிரைந்துள்ளதும் மணிகள் இழைத்த மேனிலைமாடங்களை யுடையதும் ஆகிய அரண்மனையின் முன்மண்டபத்தே, ஆளி யரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் - அரசரிமாவால் சுமக்கப்பட்ட மணிகள் பதித்த அணையின்மேலே, கழல் வேந்தர் பலர் சூழ்தர - வீரக்கழலணிந்த அரசர்பலர் தன்னைச் சூழும்படி, இருந்தான் - இருந்தவன், நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான் - விண்மீன்கள் தன்னைச் சூழாநிற்ப அவற்றிடையே அழகுற்றுத் திகழ்கின்ற முழுவெண்டிங்களை ஒத்திருந்தான், (எ - று.) திவிட்டநம்பி மண்டபத்தே வேந்தர் பலர் சூழ அரியணை மேலிருந்தவன், வானத்தே உடுத்திரளோடே பொலிவுற்ற திங்கள் மண்டிலத்தை ஒத்தான் என்க.. | ( 261 ) |
| (பாடம்) 1. கொண்டயலு. 2. மேரு. 3. யாசனத்து மேலாற் | | |
|
|