பக்கம் : 695 | | | 1090. | மங்குன்மழை சூழுமணி மால்வரையின் மேலார் கங்கைமுத னீரருவி கொண்டுகலி வான மெங்குமிட மின்றியெழில் விஞ்சையரி ழிந்தார் நங்கைமண நீரணியை நாமொழிவ தென்னோ? | (இ - ள்.) மங்குல் மழை சூழும் மணி மால் வரையின் மேல்ஆர் - கரிய முகில் சூழ்ந்துள்ள அழகிய பெரிய இமயமலையின்கட் பொருந்திய, கங்கைமுதல் நீர் அருவிகொண்டு - கங்கையே முதலிய கடவுட்புனல்களை முகந்துகொண்டு, கலி வானம் எங்கும் இடமின்றி - ஒலியையுடைய விசும்பெங்கும் இடமிலாதபடி, எழில் விஞ்சையர் - அழகிய விச்சாதரர், இழிந்தார் - வந்து இறங்குவராயினர், நங்கை மண நீர் அணியை - சுயம்பிரபையின் மணமங்கல நீராட்டுவிழாவின் பெருமையை, நாம் மொழிவது என்னோ! - அறிவுப்பெருக்கம் இல்லாத யாம் கூறுவது என்னாகும்!, (எ - று.) விஞ்சையர், கங்கை முதலியவற்றின் தீர்த்தங்களைக் கொணர்ந்து, விசும்பிலிடமின்றி நெருங்கி, நங்கையை மங்கல நீராட்டிய சிறப்பினை, யாம் கூறவல்லே மல்லேம் என்று தேவர் கூறினர் என்க. | ( 264 ) | | 1091. | ஆறுகுல மால்வரையின் மேலருவி நீரும் வீறுபெறு மெல்லியலை யாட்டியபின் மீட்டு நாறுமலர் நந்தனவ னத்தனவொ டெல்லா வேறுபடு பூமழையு மாடவிளை வித்தார். | (இ - ள்.) ஆறு - கங்கை முதலிய கடவுட்டன்மையுடையயாறுகளினும், குலமால் வரைமேல் அருவியும் - கடவுட்டன்மையுடைய இமய முதலிய மலைகளில் வீழும் அருவிகளினும் உள்ள, நீர் - நீரானே, வீறுபெறும் மெல்லியலை ஆட்டியபின் - வேறியார்க்கும் இல்லாப் பெருஞ்சிறப்புடைய சுயம்பிரபையை மங்கல நீராட்டிய பின்னர், மீட்டும் - மீளவும், மலர் நாறு நந்தனவனத்தனவொடு வேறுபடு எல்லாப் பூமழையும் - மலர் மணம் கமழும் இளம் பூஞ்சோலைகளின் உள்ளனவும் வேறுள்ளனவுமாகிய நால்வகைப் பூவானியன்ற மலர் மழையானும், ஆட விளைவித்தார் - ஆடுமாறு செய்வித்தனர், (எ - று.) ஆறு - எண்ணுப் பெயராகக் கொண்டு ஆறு குலவரை எனினுமாம். விஞ்சையர் சிறந்தயாறு அருவி முதலியவற்றின் நீராலே நங்கையை ஆட்டிப் பின்னர், நந்தனவன முதலியவற்றினுள்ள, நாறுமலர் மழையானும் ஆட்டினர், என்க. | ( 265 ) | | |
|
|