பக்கம் : 696 | | | 1092. | சாந்துசொரி மாரிபொழி கின்ற 1தகை 2யோடுந் தேந் 3துவலை வீசியுளர் கின்றதொரு தென்றல் வேந்தருல 4கங்கொன்மிசை விண்கொலிஃ தென்று மாந்தர்மருள் வாருமகிழ் வாருமுள ரானார். | (இ - ள்.) சாந்து சொரி மாரி பொழிகின்ற தகையோடு - நறுமணச் சாந்தங்கள் மழையாகக் பொழியப்படுகின்றதொரு தகுதியோடே, ஒரு தென்றல் - ஒப்பற்றதாகிய தென்றல் தானும், (மலர்க்காவின்) தேந்துவலை வீசி உளர்கின்றது - தேன் துளிகளைச் சிதறும்படி செய்து அசைந்ததாக, மாந்தர் - மக்கள், வேந்தர் உலகங்கொல் விண்கொல் இஃது என்று - இது மன்னர்களாற் புரக்கப்படும் மண்ணுலகேயோ அன்றி விண்ணவர்தம் துறக்க நாடேயோ என்று, மருள்வாரும் மகிழ்வாரும் உளரானார் - வியப்போரும் இன்புறுவோறும் ஆயினர், (எ - று.) மணச் சந்தன முதலியவற்றின் மழையோடே, தேன்றுளி சிதறுமொரு தென்றலுமுடைத் திந்நகர்; இது வானவர் நகரோ! மண்ணவர் நகரோ! என்று வியந்து மகிழ்ந்தனர், என்க. | ( 266 ) | சுயம்பிரபை மணமன்றம் புகுதல் | 1093. | மங்கலவ னப்பினதொர் கோடிமடி தாங்கி யங்கொலிவி சும்பினவர் தந்தவணி சேர்த்திப் பங்கயமு கத்த 5வர்ப லாண்டிசை 6ப ராவச் செங்கயனெ டுங்கணவள் வேள்விநகர் சேர்ந்தாள். | (இ - ள்.) மங்கல வனப்பினது ஓர் கோடிமடி தாங்கி - நன்மைமிக்க அழகுடையதாகிய ஒப்பற்ற புத்தாடையுடுத்து, அங்கு ஒலி விசும்பினவர் - அவ்விடத்தே அமரர்கள், தந்த அணி சேர்த்தி - கொடுத்த அணிகலன்களை அணிந்து, பங்கய முகத்தவர் - தாமரை மலர்போன்ற அழகிய முகத்தையுடைய மகளிர்கள், பலாண்டு இசை பரவ பல்லாண்டு பாடி வாழ்த்தா நிற்ப, செங்கயல் நெடுங்கணவள் - செவ்விய கயல்மீன்போன்ற நெடிய கண்களையுடைய சுயம்பிரபையும், வேள்விநகர் சேர்ந்தாள் - திருமண வேள்விமன்றத்தை எய்தினாள், (எ - று,) நங்கை ஆடையணிந்து கோலங் கொண்டபொழுது, வானவர் மகளிர் தாம் கொணர்ந்த அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்தனராக, அவற்றையும் அணிந்து வேள்விநகர்புக்காள், என்க. | ( 267 ) |
| (பாடம்) 1. தத. 2. னோடும். 3. திவலை. 4. கோ பிறிதொருழி கொலிதென். 5. பா. 6. பரவச். | | |
|
|