பக்கம் : 704
 

     சுயம்பிரபையோடே, கடிபடு நெடிய மாடம் - காவலமைந்த நீண்ட மேனிலை
மாடத்தின் கண்ணே, ஏறினான் - ஏறாநின்றான், (அவன் யாரெனில்) முடிவு கொள் உலகம்
எய்தும் - வினைமுடிவின்கண் எய்தற் பாலதாய வீட்டுலகத்தை எய்திய, இன்ப மாமூர்த்தி
ஒத்தான் - இன்பவடிவத்தையுடைய பெருமைமிக்க அருக பரமேட்டியையே ஒத்தவனாகிய
திவிட்டன் என்பான், (எ - று.)

கேவலஞானம் என்னும் மடந்தையோடு வீட்டிற்புகும் உயிரை, இன்பமா மூர்த்தி என்றார்
எனினும் ஆம்.
 

( 282 )

திவிட்டன் சுயம்பிரபையுடன் பள்ளியறை எய்துதல்

1109.

கழுமிய காக துண்டங் கமழ்தொறுங் காள மேகம்
குழுமிய தனைய மாடக் குவட்டிடை யமளி சேர்வார்
விழுமலர்ப் 1பிணையன் னாளும் விடலையு மேரு நெற்றிச்
செழுமணிச் சிலைசென் றேறுந் தெய்வமா மிதுன மொத்தார்.
 

     (இ - ள்.) கழுமிய - செறிந்த, காகதுண்டம் - அகிற்புகை, கமழ் தொறும் -
மணமுடைத்தாய்ச்சூழுந்தொறும், காளமேகம் குழுமியதனைய மாடக் குவட்டிடை - கரிய
மேகங்கள் கூடியதைப் போன்ற மேனிலை மாடத்தின் உச்சியின்கண் அமைந்த அமளி
சேர்வார் - அணையிடத்தே எய்துபவர்களாகிய, விழுமலர்ப் பிணையன்னாளும் - சிறந்த
மலர்மாலையையுடைய மான் பிணை போன்ற சுயம்பிரபையும், விடலையும் திவிட்டநம்பியும்,
நேருநெற்றி (செழுமணிச்சிலை சென்று ஏறும் - மேருமலையுச்சியிலுள்ள செழிப்புடைய
மணிகள் குவட்டிலே ஏறுதலையுடைய, தெய்வ மாமிதுனம் ஒத்தார் - மிதுன தேவர்களை
ஒத்தனர், (எ - று.)

தெய்வ மிதுனம் - ஆணும் பெண்ணுமாய் இணைபிரியாதிருக்கும் ஒருவகைத் தேவர்.
அகிற்புகை சூழ்தலாலே முகில் சூழும் மலையை ஒக்குமொரு மேனிலைமாடத்தே ஏறுகின்ற
நங்கை நம்பியர், மேருவிலே ஏறும் மிதுனதேவரை ஒத்தார், என்க. விஞ்சையர்
மிதுனத்தேவர் என்றார் முன்னும் (150).
 

( 283 )

 

1110. பொன்னியல் கொடியி னொல்கிப்
     பூவணைப் பொருந்தும் பாவை
கன்னிநா 2ணேற்றங் காளை
     கண்களிகொள்ள நோக்கிப்
பின்னவ 3ளொடுங்க வாங்கிப்
     பெருவரை யகலஞ் சேர்த்தி
இன்னகை மழலை கேட்பா
     னென் 4கொலிம் மிகைநா ணென்றான்.

    

 

     (பாடம்) 1. பிணையலாளும். 2. ணொடுக்கம், ணோடு. 3. ணடுங்க. 4. கொலோவென்று சொன்னாள்.