பக்கம் : 706
 

     குமரி நீர்மையாகிய அமிழ்தப் பேரியாறு, நாண் என்னும் அணையுடைத்து,
திண்டோள் ஆகிய குன்றத்தாலே தேங்கி, கலம் சிந்தி, திளைத்து விம்பி, நம்பியின் காதற்
கடலிலே கலந்தொன்றாயது, என்க. இதன்கண் இருவகைப் புணர்ச்சியும் கூறப்பட்டன.
 

( 285 )

நம்பியும் நங்கையும் மணத்தவிசில் வீற்றிருத்தல்

1112.

பருவத்தா லரும்பிப் போதாய்ப் பையவே யலர்ந்து முற்றி
1மருவித்தேங் கனிகொண் டுள்ளான் மனங்கொள 2வழிந்த கா
திருவொத்த களியின் றீஞ்சா றாரவுண் டார மாட்டார் [மத்
உருவத்தா லிருவ ராகி யுள்ளத்தா லொருவ ரானார்.
 

     (இ - ள்.) பருவத்தால் அரும்பி - அரும்புதற்குரிய இளம் பருவத்தானே அரும்பி,
போதாய் - மொட்டாகி, பையவே அலர்ந்து - பின்னர்ப் பைய மலர்ந்து, முற்றி - முதிர்ந்து,
தேம் மருவி - இனிமை பொருந்தி, கனிகொண்டு - கனிந்து, உள்ளால் மனங்கொள வழிந்த
- அகத்தூடே இருவர் மனங்களும் கொண்டு நிறைவதாக வழிந்துள்ள, திருவொத்த -
செல்வத்தை நிகர்த்த, காமக் களியின் தீஞ்சாறு காழில் காமக் கனியினது பிழியாகிய இனிய
தீவிய சாற்றை, ஆரவுண்டு ஆரமாட்டார் - தம்முள்ளம் நிறைய உண்டும் பின்னும் நிறைவுற
மாட்டாதவராய், உருவத்தால் இருவராகி - உடம்பு மாத்திரையே இருவராகி, உள்ளத்தால்
ஒருவரானார் - உள்ளத்தானே இரண்டறக் கலந்து ஒன்றுபட்டார், (எ - று.)

அரும்பிப் போதாய், அலர்ந்து, முற்றித் தேன் கனிந்து, உள்ளால் வழிந்த காமக் கனியின்
தீஞ்சாறு, உண்டு ஆரமாட்டாராய், உடலாலிருவராய், உளத்தால் ஒருவரே ஆயினர், என்க.
 

( 286 )

 

1113.

உலவிய வலங்கன் மாலை 3யொளிர்மல ருடைய மார்பிற்
குலவிய மணிமுத் 4தோடுங் குவிமுலைக் குவடு பாயக்
கலவியுங் களிப்புங் காமப் புலவியுங் கலந்து சால
நிலவிய மதுவுண் டார்போ னெஞ்சுண மயங்கி யிட்டார்.
 

     (இ - ள்.) உலவிய அலங்கன்மாலை ஒளிர் மலருடைய மார்பில் -
அசைந்தாடுதலையுடைய மாலையகத்தே திகழும் மலர்களையுடைய திவிட்டனுடைய
மார்பகத்தே, குலவிய மணிமுத்தோடும் - பொருந்திய முத்தமணி மாலையோடும்,
குவிமுலைக் குவடு பாய - சுயம்பிரபையின் குவிந்த முலைகளின் கண்கள் மோதும்படி,
கலவியும் - புணர்ச்சியும், களிப்பும் - புணர்ச்சிவயின மகிழ்தலும், புலவியும் - ஊடலும்,
கலந்து -

 

     (பாடம்) 1. மருவித்தான். 2. வளிந்த. 3. யொளிமல. 4. தேறும்.