பக்கம் : 715
 

     தென்றல் உலகிற்றூற்றும், அதனால் நினக்கு வசையேயுண்டாம் என்றபடி. இனி,
வேனிற்றென்றலில் தேமா மலர்தலின் தென்றல் மலரை மலர்விக்கும் என்றும், அதனால் நீ
வடுவுண்டாவை என்றும் வேறு பொருள்படுதல் காண்க. வடு - மாம்பிஞ்சு. அலர் தூற்றல் -
பூக்களைச் சிதறுதல். மேல் வரும் செய்யுள் இரண்டினும் இவ்வாறே இருபொருள் காண்க.
 

( 300 )

 

1127.

அடிமருங்கி னரசிறைஞ்ச
     வாழியாள்வான் பெருந்தேவி
கொடிமருங்கி னெழில்கொண்டு1கு
     ழையல்வாழி குருக்கத்தி
கொடிமருங்கி னெழில்கொண்டு
     குழைவாயாயிற் பலர்பறிப்பக்
கடிமருங்கிற் புக்கலரே
     காண்டிவாழி குருக்கத்தி.
 

     (இ - ள்.) குருக்கத்தி - குருக்கத்திக் கொடியே; அடிமருங்கின் அரசு இறைஞ்ச - தன்
அடிகளிலே மன்னர்கள் வணங்கா நிற்ப, ஆழிஆள்வான் பெருந்தேவி - ஆழிப்படையை
ஆளுதலுடைய திவிட்டநம்பியின் கோப்பெருந்தேவியாகிய சுயம்பிரபையின், கொடிமருங்கின்
எழில்கொண்டு குழையல் - கொடிபோன்ற நுண்ணிடையின் அழகை ஒப்பாகக்கொண்டு
ஒல்காதே கொள், கொடிமருங்கின் எழில் கொண்டு குழைவாய் ஆயில் - கொடிபோன்ற
நுண்ணிடையின் அழகை ஒப்பாகக் கொண்டு ஒல்கு வாயெனில், குருக்கத்தி -
குருக்கத்திக்கொடியே!, கடிமருங்கிற்புக்குப் பலர் பறிப்ப - மணமிக்க உன் பக்கத்தே புகுந்து
பலரானும் பறிக்கப்பட்டு, அலரே காண்டி - அவ்வழி நீ பழியுண்டாதலையே காண்பாய்.
வாழி : அசை,
(எ - று.)

குருக்கத்தி: அண்மைவிளி. அடாது செய்தாயென உன்பொருளைப் பலர் பறிப்ப என்க.
அலர் - பழி. மலரைப் பலர் பறிக்கப்படுவாய் என்றொரு பொருள் காண்க.
 

( 301 )

 

1128.

வணங்கி வையந் தொழ2நின்ற
     மன்னன் காதன் மடமகள்போன்
மணங்க ணாறும் பூம்பாவை
     வளரல்வாழி நறுங்குரவே
மணங்க ணாறும் பூம்பாவை
     வளர்த்தி யாயி லிளையா ராற்
கணங்க ளோடு பறிப்புண்டி
     கண்டாய் வாழி நறுங்குரவே.
 

     (இ - ள்.) நறுங்குரவே - நறிய குராமரமே !, வையம் வணங்கித் தொழநின்ற மன்னன்
காதல் மடமகள் போல் - உலகெலாம் வணங்கித் தொழும்படி சிறப்புற்று நின்ற
சடிமன்னனுடைய அன்புக்குரிய மடமிக்க மகளாகிய சுயம்பிரபையை ஒப்பாகக்கொண்டு,
மணங்கள் நாறும் பூம்பாவை

 

     (பாடம்) 1. குழைவாயாயிற் குமரியாய். 2. நின்று.