அரியது கேட்க என்ன அரிகேது பேசினான்; அங்கு அவையில் வியப்புச் சென்றது என்க. |
( 7 ) |
அச்சுவகண்டன் சினங் கொள்ளல் |
1138. | கரியவன் 1வளைந்த வெள்ளை யெயிற்றவன் காள மேகம் பெரியதொன் றிரண்டு கொம்மைப் பிறைகவ்வி யிருந்த 2தன்னான் அரியதங் கென்னை யென்னை யெனவரி கேதுசொன்ன உரையெதிர் கபில வட்டக் கண்ணெரி 3யுமிழ்ந்த மாதோ. |
(இ - ள்.) கரியவன் - கரிய மேனியை யுடையவனும், வெள்ளை எயிற்றவன் - வெண்மையான பற்களையுடையவனும், பெரியது காளமேகம் ஒன்று - பெரியதாகிய கரியமுகில் ஒன்று, இரண்டு கொம்மைப் பிறைகவ்வி இருந்தது ஒப்பான் - இரண்டு இளம் பிறைகளை வாயிடத்தே கவ்விக்கொண்டு இருந்ததை ஒத்து இருக்கின்றவனும் ஆகிய அச்சுவக்கண்டன், அரியது என்னை என்னை என - யாம் கேட்டற்கும் அரியதாய செய்தி என்னை என்னை என்று அடுக்கி வினவினனாக, அரிகேது சொன்ன உரையெதிர் - அரிகேது அப்பொழுது கூறிய மொழிகளுக்கு முன்னர், கபில வட்டம் கண் எரி உமிழ்ந்த -அவ்வச்சுவகண்டனுடைய கபில நிறம் பொருந்திய வட்டவடிவமான கண்கள் தீயை உமிழ்ந்தன, மாதோ: அசை, (எ - று.) கொம்மை - இளமை. கரியவனும், எயிற்றவனும் காளமேகம் பிறை கவ்வி யிருந்தாற் போன்றவனும், ஆகிய அச்சுவக்கண்டன் அரியது என்னை! என்னை! என அரிகேது பேசினான். அவ்வுரை யெதிர், அவன் கண் எரி உமிழ்ந்த, என்க. |
( 8 ) |
அச்சுவகண்டன் அயனின்ற தூணை அறைதல் |
1139. | மடித்தவா யெயிறு கவ்வி மருங்கினோர் வயிரக் கற்றூண் 4அடித்தன னசனி வீழ வருவரை நெரிவ தேபோற் படித்தலை நடுங்க மற்றப் பரூஉத்திரன் வயிரத் தம்பந் தொடித்தலை சிதைந்து நுங்கத் துகளெழுந் தொழிந்த 5தன்றே. |
(இ - ள்.) மடித்த வாய் எயிறு கவ்வி - அச்சுவகண்டன் மடிக்கப்பட்ட உதட்டைப் பல்லாலே அதுக்கிக்கொண்டு, மருங்கின் ஓர் வயிரக் கற்றூண் அடித்தனன் - பக்கத்தே நின்ற வயிர மணித் தூணைக் கையாலே |
|
|
(பாடம்) 1வனைந்த வெண்ணை. 2தொப்பான். 3யுமிழ்வித்திட்டான். 4அடித்தலின். 5வன்றே. |