பக்கம் : 724 | | (இ - ள்.) பிலத்திடை - மலைமுழையிலே, இரண்டு திங்கள் - இரண்டு பிறைகள், பொடித்தது போலும் - முளைத்ததைப் போன்று, பிறழ்ந்து இலங்கு எயிற்றினான் - ஒளிர்ந்து திகழும் பற்களையுடைய அச்சுவகண்டன், நின்னைப்போல் அஞ்வார்க்கு - உன்னைப் போன்று பெரிதும் அஞ்சுகின்றவர்களுக்கே, நிலத்திடை மக்கள் ஆற்றல் - மண்ணில் வாழும் மானிடர் வலிமை, மலைத்துணை பெருகிக் காட்டும் - மலையினளவிற்றாய் மிகுந்து தோன்றுவதாம், மற்று அது - மற்று அம் மானிடர் ஆற்றல், எம்மனோர்க்கு - எம்மைப் போன்றவர்களுக்கோ, ஓர் இலைத்ததும் இல்லை - ஓர் உடையிலை யளவிற்றாக வேனும் தோன்றுவதொன்றன்றாம், என்றான் - என்று கூறினான், (எ - று.) எயிற்றினான், மக்கள் ஆற்றல் நின்னைப்போல் அஞ்சுவார்க்கு, மலைத்துணை பெருகிக் காட்டும், எம்மனோர்க்கு இலைத்துணைத்தும் ஆகாது என்றான், என்க. இலை - ஈண்டுச் சிறுமைக்கோர் அளவு ஆதலால் உடையிலை என்றாம். | ( 11 ) | | 1142. | கனைகதிர்க் கடகக் கையாற் கற்றிர 1ளுதிர வெற்றிச் சினவழ லெறிப்ப நோக்கிச் சிவந்தனன் றெழித்த லோடு மனநனி மயங்கி மற்ற விஞ்சைய 2ரஞ்ச நின்ற நனைமல ரலங்கற் கேது நகைகொண்ட மனத்த னானான். | (இ - ள்.) கனை கதிர் கடகக் கையால் - மிக்க ஒளியையுடைய கடகமணிந்த தன் கையாலே, கற்றிரள் உதிர எற்றி - கல்லாற் றிரண்ட தூண் துகளாய் உதிருமாறு புடைத்து, சினவழல் எறிப்ப - வெகுளித்தீக் கால, நோக்கிச் சிவந்தனன் - அரிகேதுவைப் பார்த்து அழன்றான், மற்ற விஞ்சையர் - ஏனைய விச்சாதரர் அனைவரும், மனம் நனி மயங்கி - மனத்தே மிக்க மயக்கத்தை யடைந்து, அஞ்ச - அஞ்சாநிற்ப, நின்ற நனைமலர் அலங்கல் கேது - அவ்விடத்தே நின்ற தேன் பொருந்திய மலர் மாலையை அணிந்த அரிகேது என்பான், நகைகொண்ட மனத்தனானான் - அச்சுவகண்டன் அறியாமையைக் கருதித் தன் மனத்தினுள் நகை யுடையவனானான், (எ - று.) தூணைத் துகளாக எற்றி, அழலெறிப்ப நோக்கி, உரப்பினனாக; விச்சாதரர் எல்லாம் வெருவினர்; அரிகேது நகை கொண்டான், என்க. அச்சுவகண்டன் பேதைமை நிலனாக ஈண்டு அரிகேதுவிற்கு நகையுண்டாயிற்று. அஃதவன் அறியின் தன்னைக் கொல்வான் ஆகலின் மனத்தினுள்ளேயே அடக்கினன் என்க. | ( 12 ) |
| (பாடம்) 1ளுதிர. 2ரஞ்சி யிட்டார். | | |
|
|