பக்கம் : 728
 

     சினம் பொங்கிற்றாகக் கண்ணுள் நெருப்புப் பிறந்தது; உடல் வியர்த்தது; சினத்தீயால்
உருகினவனைப்போல் ஆயினன்; உதட்டை மடித்துக் கடித்தான்; எல்லோரும் நடுங்கும்படி
நோக்கி நக்கு நின்றான் என்க.
 

( 17 )

 

1148. மலைகளை மறித்து மற்றோர் மறிகட னடுவ ணிட்டவ்
வலைதிரை மகர முந்நீ ரதுவிது வாக்கு வேன்கொல்
உலகினை யுள்ளங் கைக்கொண் டுருளையா வுருட்டி 1யிட்டென்
பலபுனை மடந்தை தன்கீழ்ப் பதித்திடு 2வேன்கொ லென்றான்.
 
     (இ - ள்.) மலைகளை மற்றோர் மறிகடல் நடுவண் இட்டு - மலைகளை வேறொரு
கடலின் நடுவே வாரிப்போட்டு, மறித்து - மீண்டும், அலைதிரை மகரமுந்நீரது இது
ஆக்குவேன் கொல் - எறிகின்ற அலைகளையுடையதும் மகரமீன்களையுடையதுமாகிய
கடலை இம்மலையிடத்ததாக மாற்றி அமைப்பேனோ, உலகினை உள்ளங்கைக் கொண்டு -
இவ்வுலகத்தை எனது அங்கையிலே எடுத்து, உருளையா வுருட்டியிட்டு - உருளையைப்
போன்று உருட்டிவிட்டு, என் பலபுனை மடந்தை கீழ்ப்படுத்திடுவேன் கொல் - என்னுடைய
பல சிறப்புக்களையும் அணிகலனாகப் பூண்டுள்ள புகழ்மடந்தையின் அடியின்கீழ்
அடங்குமாறு செய்வேனோ, என்றான் - என்று கூறினான், (எ - று.)

பலபுனை மடந்தை என்றது புகழ் மடந்தையை, அச்சுவகண்டன், மலைகளைக் கடலிற்
புரட்டுவேனோ? கடல்களை மேடாக்குவேனோ? உலகினை உருட்டுவேனோ? என்றான்,
என்க.

இத்தகைய செயல்களைச் செய்தாலன்றித் தன் சினத்தை ஆற்றிக் கொள்ள
வியலாதென்றபடி.
 

( 18 )

 

1149. அனன்றனன் றவைகள் பேசி யமையுமவ் வரசர் தீமை
மனங்கொளப் படுவ தாயின் மணிவரை யுலகின் வாழுஞ்
சனங்களைத் திரட்டிப் பின்னைத் தக்கதொன் றறிவ னென்றான்
சினங்கெழு காலன் மற்றோர் காலன்மேற் 3சிவந்த தொப்பான்.
 
     (இ - ள்.) சினங்கெழு காலன் - வெகுளி பொருந்திய மறலி, மற்றோர் காலன்மேல்
சிவந்தது ஒப்பான் - வேறேயொரு மறலியின்மேல் வெகுண்டதை ஒப்பவனாகிய
அச்சுவகண்டன், அனன்று அனன்று அவைகள்

 


     (பாடம்) 3 யீட்டென். 2 வன்கொ. 3 சினந்த.