பக்கம் : 729 | | பேசி - சினந்து சினந்து அத்தகைய மொழிகளைப் பேசி, அமையும் - அமைவதாக, அவ்வரசர் தீமை மனங்கொளப்படுவதாயின் - அவ்வேந்தர்கள் நமக்கியற்றியுள்ள தீங்குகள் நம்மால் பொருளாகக்கொள்ளப்படுவன ஆனால், மணிவரை யுலகின் வாழும் - இவ்விரத்தின பல்லவம் என்னும் மலையுலகிலே வாழுகின்ற, சனங்களைத் திரட்டி - மக்களை ஒருங்கே கூட்டிவைத்து, பின்னைத் தக்கது ஒன்று அறிவன் என்றான் - பின்னர் அவ்வேந்தர்க்கு மாறாகச் செய்யத்தகுந்ததொன்றை ஆராய்ந்து காண்பன் என்றான், (எ - று.) என்கோற் கீழ்வாழ்வாரை ஒருங்கே கூட்டி, அவருடன் ஆராய்ந்து, என் பகைவர் செய்த தீமைக்குத் தக்க மாறு காண்பல் என்றான், என்க. | ( 19 ) | படை எழுச்ச | 1150. | சிறந்தெரி யனலோ டொப்பான் பணிகொண்டு திசைக ளோடி அறைந்தனர் முரசிற் சாற்றி யறைதலு ரெல்லா மறைந்தன வுலக மென்ன மாய்ந்தன திசைக ளென்னப் பறந்தனர் விசும்பு 1போர்ப்பக் கடற்படை பரப்பி வந்தார். | (இ - ள்.) சிறந்து எரி அனலோடு ஒப்பான் - மிக்கெரிகின்ற தீயை ஒத்து வெகுள்வானாகிய அச்சுவகண்டனுடைய, பணிகொண்டு - ஏவலை மேற்கொண்டு, திசைகள் ஓடி - திசைகள்தோறும் விரைந்துசென்று முரசிற்சாற்றி அறைந்தனர் - முரசுமுழக்கிக் கூறினார், கூறலும் - அங்ஙனம் பணியாளர் கூறினவுடன், அரைசர் எல்லாம் - அம்மணிவரை உலகம் ஆளும் மன்னர் எல்லாம், கடற்படை பரப்பி - கடல்போன்ற தத்தம் பெரும்படைகளைப் பரப்பி, உலகம் மறைந்தன என்ன - உலகங்கள் இப்படையால் மறைக்கப்பட்டன என்று கூறுமாறும், திசைகள் மாய்ந்தன - திக்குகள் ஒழிந்துபோயின, என்ன - என்று கூறுமாறும், விசும்புபோர்ப்ப பறந்தனர்-விண்ணை மறைத்துப் பறந்து, வந்தார் - வருவாராயினர், (எ - று.) பறந்தனர்: முற்றெச்சம். தீயை ஒப்பானாகிய அச்சுவகண்டன் பணியோடே, பணிமாக்கள் முரசிற் சாற்றி அறைந்தவுடனே, அரசரெல்லாம், மறைந்தன என்ன, மாய்ந்தன என்ன, மாய்ந்தன என்ன விசும்பு போர்ப்பக் கடற்படை பரப்பி பறந்து வந்தனர், என்க. விஞ்சையராகலின் பறந்து வந்தனர் என்க. | ( 20 ) |
| (பாடம்) 1பொற்பசு. | | |
|
|