பக்கம் : 731 | | அச்சுவகண்டனுக்கு இத்துணைச் சினம் உண்டாமாறு செய்தார் யாவர்! அளியரோ அளியர் அத்தகைய பேதையர், மாண்டோரே யாவர் என்றார், என்க. “கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்Ó (திருக். 894) என்னும் மெய்ம் மொழிக்குச் சான்றாக, அறியாமையால் தமக்கே கேடு சூழ்ந்தார் ஆகலின் “அளியர்Ó என்றார். | ( 22 ) | | 1153. | 1ஞாலமேற் றிரிந்து நாளு 2முயிர்களை நடுங்கப் பார்க்குங் காலனைக் கதம்பட் டான்கொ லன்றெனிற் கற்ப மாள்வார் மேலெனக் கிருப்பார் போலு மெனவெகுண் டனல்கின் றான்கொல் வேலைநீ ருலகின் மற்றிவ் வெகுளிக்கு முதலென் னென்பார். | (இ - ள்.) ஞாலமேல் திரிந்துநாளும் உயிர்களை நடுங்கப் பார்க்கும் காலனை - உலகத்தின்மிசை நாள்தோறும் நாளுலந்த உயிர்களை அஞ்சிநடுங்கும்படி ஆராய்ந்து உழலும் மறலியை, கதம்பட்டான்கொல் - இவன் சினங்கொண்டனனோ?, அன்றெனில் - அஃதன்றாயின், கற்பம் ஆள்வார் - கற்பலோகங்களில் ஆட்சிசெய்யும் தேவமன்னர்களிற் சிலர், எனக்குமேல் இருப்பார்போலும் - என்னை விஞ்சிய ஆற்றலுடையார் உளராயின் காண்பல் என்று கருதி, அனல்கின்றான்கொல் - வெகுள்கின்றனனேயோ, வேலைநீர் உலகின்மற்று இவ்வெகுளிக்கு - (அதுவும் அன்றெனின்,) கடலாற் சூழப்பட்ட இம்மண்ணுலகத்தே இத்தகைய பெருஞ்சினந் தோன்றுவதற் குரிய, முதல் என் என்பார் - காரணம் யாது என்று ஐயுறுவார், (எ - று.) காலனைச் சினந்தானோ அன்றேல், கற்பலோகத்து வாழ்வாருள் பகையுளராகக் கண்டு வெகுள்கின்றனனோ இவன் வெகுளிக்கு ஏதியாதென்று ஐயுற்றார் என்க. | ( 23 ) |
| (பாடம்) 1ஞாலங்கண்டிரிந்து, ஞாலங்கள் திரிந்து. 2முயிர்களும். | | |
|
|