பக்கம் : 732
 
 
1154. ஊழிகள் பெயர்க்க லுற்றிவ் வுலகினைப் பிறிதொன் 1றாக்கி
வாழுயி ரொருங்கு வாரி மறிகட னடுவட் பெய்வான்
சூழிய தொடங்கு கின்ற தாங்கொலோ 2சொல்லி னீடொன்
றாழியான் வெகுளிக் குண்டோ 3யாரிரை யாவ தென்பார்.
 

     (இ - ள்.) ஊழி பெயர்க்கலுற்று - இவ்வூழிக் காலத்தை மாற்ற எண்ணி,
இவ்வுலகினைப் பிறிதொன்றாக்கி - இவ்வுலகத்தை வேறோர் உலகாக மாற்றி, வாழ்உயிர்
ஒருங்கு வாரி - இதன்கண் வாழும் உயிர்களை ஒருசேர அள்ளி, மறிகடல் நடுவண்
பெய்வான் - அலைபுரளும் கடலிடைய தள்ளும் பொருட்டு, சூழிய - சூழ்ச்சிசெய்ய,
தொடங்குகின்றது ஆங்கொலோ - தொடங்கும் ஒரு செயலாகுமோ, சொல்லின் -
ஆராய்ந்து கூறுமிடத்தே, ஆழியான் - ஆழிப்படையையுடைய அச்சுவகண்டனுடைய,
வெகுளிக்கு, ஈடு உண்டோ - சினத்திற்கு இலக்கு உண்டோ?, ஆர் இரையாவது - இதற்கு
இரையாவது யார்கொலோ?, என்பார் - என்று இரங்கா நிற்பர், (எ - று.)
ஈடு - இலக்கு. வார் - நேர்மை.
அச்சுவகண்டன் நிகழ்கின்ற ஊழியை மாற்றி உலகினை மாற்றியமைக்கக் கருதி, அதன்
பொருட்டு உயிாக்ளைக் கடலிற் பெய்து அழிக்கும் கருத்தால், இவ்வாறு
சினங்கொண்டனனோ! அன்றெனில், இவன் சினத்திற்கு இலக்கு உலகில் இல்லையே! இதற்கு
இரையாகுவார் யாரோ? என்றார் என்க.
 

( 24 )

 

1155. தானவ 4ரரக்கர் பண்டே தஞ்சமா 5மிவற்கு மண்மேல்
ஊனவர் மனித்த ரேக 6வுவனுக்கோர் துகளு மாகார்
வானவ ரிவற்கு மாறாய் வருபவர் மதிப்பி னில்லை
ஏனவர் முனிவு செய்வார் யார்பிற ருரைமி னென்பார்.
 
     (இ - ள்.) தானவர் அரக்கர் பண்டே இவர்க்குத் தஞ்சம் -விச்சாதரர்களும்
அரக்கர்களும் பண்டைக்காலத்தேயே இவன்பால் தஞ்சம்புக்கோர், மண்மேல் ஊனவர்
மனித்தர் ஏக - மண்ணிடை வாழும் ஊன்பயில் உடலுடை மானிடர் இவனுக்குப்
பொருளலர் ஆதலால் அவர் கிடக்க, வானவர் உவனுக்கோர் துகளும் ஆகார் - தேவர்கள்
இவனுக்கு ஒரு துகளும் ஆகமாட்டார், இவற்கு மாறாய் வருபவர் - எனவே
இவ்வச்சுவகண்டனுக்குப் பகையாய் வரும் ஆற்றலுடையார், மதிப்பின் இல்லை - ஆராய்ந்து
காணுமிடத்தே ஒருவரும் இல்லை, முனிவு செய்வார் ஏனவர் பிறர் யார் - இவனால்
வெகுளத் தக்கார் பிறர் யாரே உளர், உரைமின் என்பார் - கூறுங்கோள் என்று
வினவுவார்கள், (எ - று.)

 


     (பாடம்) 1றாகி. 2வன்றிவிட்டார். 3வாரிநிரை. 4ரரசர். 5விவற்கு. 6விவனுக்கோர்.