பக்கம் : 733
 

     ஆம்: அசை. தானவர் - விஞ்சையர். உவன் - அச்சுவகண்டன். துகள் - தூசி.
ஏனவர் என்றது கருடர் கிம்புருடர் முதலிய தேவ வகுப்பினரை.
 

( 25 )

 

1156. இற்றதிவ் வுலக மென்பா ரெரிந்தன திசைக ளென்பார்
அற்றன மகர முந்நீ ரகம்புலர்ந் தொழியு மென்பார்
மற்றினி மொழியல் வேண்டா வருவன வறிய லாகா
உற்றபி 1னறிது மென்றாங் குரையொழி வாரு மானார்.
 
     (இ - ள்.) இவ்வுலகம் இற்றது என்பார் - இந்த உலகம் முடிவுற்றது என்று
அவ்வரசருட் சிலர் கூறுவர், திசைகள் எரிந்தன என்பார் - எட்டுத்திசைகளும் இவன்
சினத்தீயால் எரிந்தொழியும் என்று சிலர் கூறுவர், அற்றன மகரமுந்நீர் அகம் புலர்ந்து
ஒழியும் என்பார் - நீர் வறந்தனவாகி மகரமீன் வாழும் கடல் உள்ளிடம் காய்ந்தொழியும்
என்று சிலர் கூறுவார்கள், மற்றினி மொழியல் வேண்டா - வேறு சிலர் இனி இத்தகைய
மொழிகள் பேசுதலை ஒழியுங்கோள். வருவன அறியலாகாமேல் நிகழும் செயல்கள் நம்மால்
அறியுந்தரத்தன அல்ல; உற்றபின் அறிதும் - அது யாதாயினும் நிகழ்ந்த பின்னர்
அறிந்துகொள்வேம், என்று - என்று கூறி, உரை ஒழிவாரும் ஆனார் - சொல்லவிந்து
அமைவார்களும் ஆயினார், (எ - று.)
இவ்வுலகம் இறுதி எய்திற் றென்பாரும், கடல்வற்றி ஒழியுமென்பாரும், இனி இன்ன
கூறவேண்டா; வருவன அறியலாகா; உற்றபின் அறிதும்; என்பாரும் ஆயினர் என்க.
 

( 26 )

 

1157. அஅச்சமோ டுலக மின்றே யவிந்தன 2பொன்று மென்பார்
நச்செரி நகையி னாலே நடுங்கின திசைக ளென்பார்
3இச்சைகள் பிறந்த வாற்றா லினையன நினையும் போழ்திற்
கச்சையங் களிநல் யானைக் காவலன் கனன்று சொன்னான்.
 
     (இ - ள்.) உலகம் இன்றே அச்சமோடு அவிந்தன பொன்றும் என்பார் - வேறு சிலர்
இவ்வுலகில் வாழும் உயிர்கள் எல்லாம் இப்பொழுதே அச்சத்தாலே உயிர்ப்படங்கி
இறந்தொழியும் என்பர், திசைகள் - வேறு சிலர் எட்டுத் திசைகளும், நச்சு எரி
நகையினாலே - இவன் சினமாகிய நஞ்சு அளாவிய தீக்காலும் சிரிப்பாலே, நடுங்கின -
நடுக்கமடைந்தன, என்பார் - என்று கூறுவர், இச்சைகள் பிறந்தவாற்றால் - இங்ஙனமே
அவ்வரசர்கள் தத்தம் விருப்பம் தோன்றிய வழியானே, இனையன நினையும் போழ்தில் -
இன்னோரன்னவற்றை நினைக்கும் பொழுது, கச்சையங்களி நல்யானை - கச்சையென்னும்
கயிற்றையுடைய அழகிய மதக்களிப்பு மிக்க அரசுவாவினையுடைய, காவலன் கனன்று
சொன்னான் - அச்சுவகண்டன் மனம் அழன்று கூறுவானாயினான், (எ - று.)
 

 


     (பாடம்) 1னொழியு, னறியு. 2 லீன்று. 3 இச்சையள்.