பக்கம் : 735 | | (இ - ள்.) முழையின் உள்ளான் முரைசொலி முழங்குகின்றதனோடு ஒப்ப - ஒரு குகையின் ஊடே முரசு முழங்கும் ஒலியைப் போன்று, விரை ஒலி விளங்குதாரான் - மணங்கமழ்ந்து தழைத்துத் திகழ்கின்ற மலர்மாலையை அணிந்த அச்சுவகண்டன், விளம்பிய வெகுளி மாற்றம் - கூறிய சினமொழிகளை, அரைசர்கள் - அங்குக் குழீஇய மன்னர் அனைவரும், ஆங்குக் கேட்டார் - அவ்விடத்தே செவியுற்றார்கள், அடிகள் - அடிகளே!, இதற்கோ - இவ்வெளிய செயலின் பொருட்டோ, இவ்வாறு உரைசெல முனிவது! என்று - இப்படி மொழிகள் பயனிலவாய்க் கழிய வெகுள்வது என்று ஒருங்கே கூறியதனால், ஓர் ஒல்ஒலி எழுந்தது அன்றே - ஒல்லென்னும் ஒரு பேரொலி அவ்வவையிடத்தே எழுந்து முழங்கிற்று, அன்றே: அசை, (எ - று.) இதன் பொருட்டு அடிகள் இத்துணைப் பேசுதலும் மிகையென்பார் உரைசெல - உரைபயனிலவாய்ப் போக என்றார். | ( 29 ) | மன்னர்களின் மறவுரை | 1160. | செழுமல ரலங்கன் மார்பன் செங்கண்டீ யுமிழக் கண்டும் எழுமலர்ந் தனைய திண்டோ ளிவைசுமந் திருப்ப 1தென்னே 2கழுகுபோங் களத்து வென்று கதலிகை நடுது மன்றேல் விழவயல் விசும்பி னார்க்கு விருந்தின மாது மென்பார். | (இ - ள்.) செழுமலர் அலங்கல் மார்பன் - செழிப்புடைய மலர்மாலையை அணிந்த நம் அரசன், செங்கண் தீஉமிழக் கண்டும் - சிவந்த கண்கள் சினத்தாலே தீக்காலுதலைக் கண்டிருந்தேயும், எழுமலர்ந்தனைய திண்தோள் இவை சுமந்து இருப்பது என்னே! - தூண்பருத்தாற் போன்ற திண்ணிய இத்தோள்களையும் தூக்கிக்கொண்டு யாம் வாளாவிருத்தல் நம் பெருமைக்கு யாதாம், கழுகுபோம் களத்து - கழுகுகள் ஊன் விரும்பிச் செல்லும் போர்க்களத்தே இன்னே சென்று, வென்று கதலிகை நடுதும் - அப்பகைவரைக் கொன்று வெற்றிக்கொடியை நடுவேம், அன்றேல் - அது மாட்டேமேல், விழவயர் விசும்பினார்க்கு விருந்தினர் ஆதும் என்பார் - தூய மறவர் வருகையை எதிர்கொண்டு விழாவெடுக்கும் தேவர்களுக்கு யாம் போரின்கண் நம் புலால் யாக்கை நீத்து விருந்தினராய் ஆகக்கடவேம், என்று மறவுரை கூறா நிற்பர், (எ - று.) மார்பன் கண் தீயுமிழக் கண்டும் தோள் சுமந்திருப்பதென்னே! இன்னே போர் ஆற்றி வெற்றிக் கொடி நடுதும், இன்றேல் விண்ணோர் விருந்தாதும் என்பார் என்க. | ( 30 ) |
| (பாடம்) 1தென்னை. 2கழுகுபோற். | | |
|
|